Sunday, December 20, 2009

பெண்கள் பற்றி பரிசுத்த வேதாகமம் மற்றும் குர்‍ஆன் என்ன சொல்கிறது ??

பெண்கள் வேதாகமம், குர்-ஆன் ஒப்பீடு

உலகத்தில் எந்த நாட்டில் பார்த்தாலும் பெண்கள் கலாச்சார ரீதியில் மிகவும் தாழ்வான நிலையிலே வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் என்றால் இஸ்லாமிய பெண்கள். அதுவும் ஆபிரிக்க தேசத்திலே சொல்லிமுடியாத இன்னல்களை அவர்கள் அனுபவிக்கின்றார்கள். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பெண்களை அடிப்பதற்கு குர்-ஆன் ஆண்களுக்கு சொல்லித்தருகின்றது. அதனால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், பெண்களை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர்..

வேதாகமத்திற்கும் குர்-ஆனிற்கும் உள்ள வித்தியாசங்களை கவனியுங்கள்.

குர்-ஆன்:

ஒரு மனிதன் நான்கு பெண்களை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கின்றது.

ஸீரா 4: 3 உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ.

வேதாகமம்:

மத்தேயு 19: 4- 6 அதிகாரங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கின்றார்:
ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?


1.கொரிந்தியர் 7: 2 வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் சொல்கின்றார்:

அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும். வேதாகமம் ஒருவனுக்கு ஒருத்தி என்கின்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றது.

குர்-ஆன்:

முஹமது நபிக்கு நான்கு பெண்கள் போதவில்லை, அதனால் அவர் விரும்பிய அளவிற்கு பெண்களை திருமணம் செய்வதற்கு அல்லாவிடம் அனுமதி பெறுகின்றார்.

அந்த வசனம்: ஸீரா 33: 50 அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம். இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களுடைய மனiவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே விதி விலக்களித்தோம். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன். முஹமது நபிக்கு 11 மனைவிகள் இருந்தார்கள்

குர்-ஆன்:


பெண்களை அடிப்பதற்கு குர்-ஆன் ஆண்களுக்கு அனுமதி கொடுக்கின்றது.


ஸீரா 4: 34 எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள் அதிலும் திருந்தாவிட்டால் அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

வேதாகமம்:

எபேசியர் 5: 23 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

கொலோசேயர் 3: 19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.

குர்-ஆன்:

சொத்தில் பெண்களுக்கு ஆண்களுக்கு கிடைப்பதில் அரைவாசி

ஸீரா 4: 11 உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்.

வேதாகமம்:

கலாத்தியர் 3: 28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்


குர்-ஆன்:

சாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்


ஸீரா 2: 282 உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்

வேதாகமம்:

சுவிசேஷ புஸ்தகங்களில் கிருபை பெற்ற முதலாவது நபர் ஒரு பெண். இயேசு உயிர்த்தெழுந்த பின்பு முதலில் ஒரு பெண்ணுக்குத்தான் காட்சியளித்தார். ஆண்டவராகிய இயேசு ஆண்களையும், பெண்களையும் ஒரே மாதிரியே நேசித்தார்.

லூக்கா 1: 30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். யோவான் 20: 14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்,

ஸஹீஹ_ல் புகாரி:

(முகமது நபியின் உரைகள் அடங்கிய புஸ்தகம், குர்-ஆனுக்கு எவ்வளவு மதிப்பு இஸ்லாமியர்கள் கொடுக்கின்றார்களோ, அந்தளவு மதிப்பு இதற்கும் கொடுக்கின்றார்கள்)
Volume 1, Book 2, Number 28: சொல்கின்றது,

முகமது நபிக்கு அல்லா நரகத்தை காட்டுகையில் அங்கே அதிக சதவிகித மக்கள் பெண்களே என்று.



வேதாகமம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கின்றது. தேவன் அன்பே உருவானவர், அவரிடத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. அவர் ஆண்களை எப்படி நேசிக்கின்றாரோ, அப்படியே பெண்களையும் நேசிக்கின்றார். வேதாகமத்தினுடைய பார்வையில் இயேசுவை யார் யார் ஏற்று கொண்டார்களோ, அத்தனை பேரும் கடவுளுடைய பிள்ளைகள்.


நன்றி : http://www.tamilchrist.ch

No comments:

Post a Comment