Saturday, January 30, 2010

கர்த்தர் உன்னை மேன்மேலும் ஆசிர்வதிப்பார்



சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கிய தேவ செய்தி (ஆடியோ)



Thursday, January 28, 2010

பயப்படாதே நான் உனக்கு துணை நிற்க்கிறேன் (ஆடியோ)


சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கிய தேவ செய்தி (ஆடியோ)

உன்னை அதிசயம் காணப்பண்ணுவேன் (ஆடியோ)

சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கிய தேவ செய்தி (ஆடியோ)

Wednesday, January 27, 2010

நான் சகலத்தையும் புதிதாக்குவேன் (ஆடியோ)

சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கிய தேவ செய்தி (ஆடியோ)

கர்த்தர் உன்னை உயர்த்துவார் (ஆடியோ)

சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கிய தேவ செய்தி (ஆடியோ)

Monday, January 25, 2010

ஜீவிதத்தில் முதல் இடம் யாருக்கு ? ஆராதனை பகுதி

Part I





Part II





Part III




நன்றி : A.G. தமிழ் திருச்சபை, ஷார்ஜா.

Sunday, January 24, 2010

ஜீவிதத்தில் முதல் இடம் யாருக்கு ? தேவ செய்தி

Rev. David Stewart, JR. வழங்கிய தேவ செய்தி

Part I



Part II



Part III


Part IV


Part V


Part VI



நன்றி : A.G. தமிழ் திருச்சபை, ஷார்ஜா.

அனுதின மன்னா ஜனவரி 24

நன்மையான ஈவுகள்

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும்,
தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். - பிலிப்பியர் 2:15-16.


நாம் நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருப்பதால் நாம் சிலக் காரியங்களைக் குறித்து யோசிப்பதில்லை. உலகில் எல்லாருக்கும் எல்லாம் நன்றாக வாய்ப்பதில்லை. அநேகர் வேதனையின் மத்தியில் ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறார்கள். சிலருக்கு வேதனையே வாழ்க்கை என்று வாழ்கிறவர்களும் உண்டு. சிலருடைய வாழ்க்கையை பார்க்கும்போது தேவன் நம்மை எந்த அளவு ஆசீர்வதிததுள்ளார் என்பதை நாம் கண்கூடாக கணடிருக்கிறோம். நாம் எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும் செய்யும்படியாக அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு ஆலோசனை கூறுகிறார். பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரவேலர் முறுமுறுத்து தேவனை கோபமூட்டியதுப் போல நாமும் முறுமுறுத்து தேவனை கோபமூட்டாமல் எல்லாவற்றிலும் தேவனுக்கு நன்றி செலுத்துவோம். நம்மைவிட அநேக காரியங்களில் குறைவுள்ளவர்களைக் கண்டு நம்மை ஆசீர்வதித்த தேவனுக்கு நன்றியாயிருப்போம். இன்று நீங்கள் ஒருவரிடம் கோபமாக பேசுவதற்கு முன் பேச முடியாத ஊமையான மனிதனைக் குறித்து சிந்தியுங்கள்.

இன்று உங்கள் சாப்பாட்டின் ருசியைக் குறித்து குறை சொல்வதற்கு முன் சாப்பிட ஒன்றுமே
இல்லாமல் பட்டினியாக இருப்பவரைக் குறித்து நினையுங்கள் இன்று உங்கள் கணவரைப் பற்றியோ மனைவியைப் பற்றியோ குறை சொல்வதற்கு முன் தனக்கு இன்னும் திருமணமாகவில்லையே என்று கடவுளிடம் முறையிடும் நபரைக் குறித்து சிந்தியுங்கள்.

இன்று உங்கள் வாழ்க்கையை குறித்து முறுமுறுப்பதற்கு முன் சிறு வயதிலும் வாலிப வயதிலும் மரித்து பரலோகத்திற்கு சென்றுவிட்ட ஆத்துமாக்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.

இன்று உங்கள் பிள்ளைகளைக் குறித்து குறைகளை சொல்வதற்கு முன் பிள்ளையை வாஞ்சித்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களைக் குறித்து யோசியுங்கள்.

இன்று உங்கள் வீடு அழுக்காக இருக்கிறது, சுத்தமாக வைக்கவில்லை என்று மற்றவர்களை குறை சொல்வதற்கு முன் தெருக்களில் அழுக்கில் வாழ்பவர்களைக் குறித்து யோசியுங்கள்.


இன்று இவ்வளவு தூரம் நான் காரை ஓட்டிச் செல்ல வேண்டுமே என்று முறுமுறுக்குமுன் அவ்வளவு தூரம் கால்நடையாகவே நடக்கிறவர்களை குறித்து யோசியுங்கள்.

இன்று உங்களது அதிகமான வேலையைக் குறித்து முறுமுறுக்கிறதற்க்கு முன் வேலை
இல்லாதவர்களையும், உங்கள் வேலை தனக்கு இல்லையே என்று ஏங்குகிறவர்களையும் யோசியுங்கள்.இன்று மற்றவர்களை குற்றம் சொல்வதற்கு உங்கள் விரலை அவர்கள் மேல் காட்டுவதற்கு முன் பாவம் செய்யாதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை என்பதையும் நாம் எல்லாரும் கர்த்தருக்கு முன்பாக பதில் சொல்ல வேண்டும் என்பதையும் யோசியுங்கள்.

நீங்கள் வாழுகிற வாழ்க்கை கர்த்தரால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பரிசு. அதை சந்தோஷமாய் கொண்டாடுங்கள், வாழுங்கள், நல்லபடியாக நிறைவேற்றுங்கள். தேவையில்லாமல் முறுமுறுத்து உங்கள் சந்தோஷத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஆகவே, இன்று வாழும்போதே உங்கள் அன்பை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள். அன்பு என்பது மறைத்து வைக்கவோ, பூட்டி வைக்கவோ அல்ல, அதை மற்றவர்களுக்கு பகிர்ந்துக் கொடுக்கவே, ஆகையால் கொடுக்க வேண்டியவர்களுக்கு உங்கள் அன்பை கொடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!


நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கர்த்தர் தந்த ஆசீட் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா

ஜெபம்:
இரக்கமும் மன உருக்கமுமுள்ள நல்லதகப்பனே, நாங்கள் எங்கள் குறைகளையே பெரிதாக எண்ணி முறுமுறுத்துக் கொண்டிராமல், உலகில் எத்தனைப் பேர் எங்களைவிட தாழ்நத நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து எங்களை இந்த நல்ல நிலையில் வைத்த தேவனுக்கு நன்றிகளை ஏறெடுக்கிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த நல்ல வாழ்க்கைக்காக நன்றி தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

Saturday, January 23, 2010

அனுதின மன்னா ஜனவரி 23

கர்த்தரின் காப்பி(Coffee)

இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து,
சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. - பிரசங்கி - 5:18.



ஒரு முறை ஒரு சில மாணவர்கள் தங்கள் வயதான முன்னாள் கல்லூரி பேராசிரியரைக் காண வந்திருந்தார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது தங்களது வேலை பளுவைக் குறித்தும் தங்களது வாழ்க்கையைக் குறித்தும் ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது பேராசிரியர் அவர்களுக்கு காப்பி கொண்டு வருவதற்காக உள்ளேச் சென்றார்.


அவர் ஒரு பெரிய பாத்திரத்தில் காப்பியையும், விதவிதமான காப்பி கோப்பைகளையும் (Coffee Cups) கொண்டு வந்தார். அந்த கோப்பைகள் சில கண்ணாடியினாலிருந்தது, சில பிளாஸ்டிக்காக இருந்தது. சில சீனா களிமண்ணால் செய்யப்பட்டிருந்தது. சில விலை உயர்ந்ததாகவும், சில அழகிய கைவேலை செய்யப்பட்டதாகவும் சில சாதாரணமாகவும் இருந்தது. அவர் சொன்னார், 'நீங்களே உங்கள் கோப்பைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்' என்றார். அவரவர் ஒவ்வொரு கோப்பையை எடுத்து அதில் காப்பியை ஊற்றி குடிக்க ஆரம்பித்தனர்.


அப்போது அந்த பேராசிரியர், ' நீங்கள் பார்த்திருந்தீர்களானால், அதிக விலையான கோப்பைகளும், சிறந்த கோப்பைகளும் முதலில் எடுக்கப்பட்டு, சாதாரண மற்றும் தரம் குறைந்த கோப்பைகள்; விடப்பட்டிருக்கின்றன. சாதாரணமாக எல்லாரும், தங்களுக்கென்று வரும்போது சிறந்ததையே தெரிந்துக் கொளவார்கள், என்றாலும் அதுவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் படும் பாடுகளுக்கு காரணம் என்று பீடிகையோடு பேச ஆரம்பித்தார்.


அந்த கோப்பைத் தன்னில் தானே அதில் உள்ள காப்பிக்கு சுவை சேர்ப்பதில்லை. உங்கள்
அனைவருக்கும் காப்பிதான் தேவையே தவிர கோப்பைகள் இல்லை. ஆனாலும் நீஙகள் தெரிந்தெடுத்தது சிறந்த கோப்பைகளை. மட்டுமல்ல, நீங்கள் மற்றவர்களுடைய கோப்பைகளையும் பார்க்கத் தொடங்கினீர்கள்..


இப்போது இப்படி சிந்தித்துப் பாருங்கள், காப்பிதான் நமது வாழ்க்கை, கோப்பைகள்தான், நமது பணம் பட்டம், பதவி, வேலை என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி அந்த கோப்பைகள் காப்பியின் தரத்தையோ, ருசியையோ மாற்ற முடியாதோ, அதைப் போல உங்கள் பணமோ, பட்டமோ, வேலையோ உங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தையோ இன்ப துன்பங்களையோ நிர்ணயிக்க நாம் அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது. சில நேரங்களில் நமது கவனம் முழுவதும் எப்படி சம்பாதிக்க வேண்டும், எப்படி வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அதிலேயே இருப்பதால் கர்த்தர் நமக்கு கிருபையாக கொடுத்த ஆயுசின் நாட்களை சந்தோஷமாக ருசி பார்ப்பதில்லை' என்றார்.


தேவன் நமது வாழ்க்கையை உருவாக்குகிறாரே தவிர கோப்பைகளை அல்ல. அவருடைய சித்தத்தின்படி நமக்கு வேலையும் ஐசுவரியமும் கிடைத்தாலும் அதிலேயே நம் கவனத்தை செலுத்தி, நமது உடல் நிலையை கெடுத்துக் கொள்வதற்கல்ல. அநேகர் தங்களுடைய வாலிப வயதில் உழைத்து, சரியாக சாப்பிடாமல், சரியான உடைகளை உடுத்தாமல், ஓவர் டைம் என்று அப்படியும் சம்பாதித்து, கேட்டால் என் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கிறேன் என்றுச் சொல்லி, மாடாக உழைத்து தேய்ந்துப் போவார்கள். கடைசியில் வயதான காலத்தில் பார்த்தால், இல்லாத வியாதிகள் ஒவ்வொன்றும் அவர்களை தாக்கி, கடைசியில் வைத்தியர்களுக்கு தஙகள் பணத்தை கொண்டுப் போய் கொட்டுவார்கள். மட்டுமல்ல, பின்னர் வாழ்க்கையே கஷ்டம்தாங்க, ஒரு சுகமும் இல்லை என்று வேதாந்தம் பேசுவார்கள்.

நாம் உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு என்று பார்த்தோம். அதற்காக தீய வழிகளிலும், உடல்நலத்தை கெடுக்கிற காரியங்களிலும் உலகத்தை அனுபவிப்பதைச் சொல்லவில்லை. அவைகள் தேவனுக்கு அருவருப்பான காரியங்கள். கஷ்டப்பட்ட சம்பாதிப்பதை குடும்பமாக நேராநேரம் சாப்பிட்டு, சரியான உடைகளை உடுத்தி, சந்தோஷமாக இருப்பதையே கர்த்தர் விரும்புகிறார். ஆகவே உங்கள் காப்பிகளை சந்தோஷமாய் சாப்பிடுங்கள்.‘சந்தோஷமான மக்களுக்கு எல்லாம் சிறந்ததாக
அமைவதில்லை, ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் சிறந்ததாக அமைத்துக் கொள்கிறார்கள்’.


சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க

உயர்வானாலும் தாழ்வானாலும்

சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்



ஜெபம்:
சர்வத்தையும் படைத்த எங்கள் சர்வ வல்லமையுள்ள தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுத்துள்ள வாழ்க்கையில் நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதையே நீர் விரும்புகிறீர். அப்படி நாங்கள் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். உமக்கு பிரியமில்லாத வழிகளில் சென்று விடாமல், நீர் கொடுத்த ஐசுவரியத்தையும், வேலையையும் நாங்கள் அனுபவிக்க உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Friday, January 22, 2010

ஆராதனை

Part I





Part II





Part III




நன்றி : A.G. தமிழ் திருச்சபை, ஷார்ஜா.

அனுதின மன்னா ஜனவரி 22

ஜெயமுள்ள வாழ்க்கை

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, வேண்டிக்கொள்ளுகிறேன். - (எபேசியர் 3:17-19).


ஒரு முறை பிரசங்கியார் உ.க.ஙர்ர்க்ஹ் அவர்கள் தன்னுடைய பிரசங்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் காட்டி, அதனில் உள்ள காற்றை எப்படி எடுப்பது என்றுக் கேட்டார். ஓவ்வொருவரும் ஒரு பதிலைக் கூறினார்கள். “ஒருவர் சொன்னார், ஒரு குழாயை வைத்து அதை உறிஞ்சி எடுத்துவிடுங்கள்” என்றுக் கூறினார். அப்படி எடுத்தால் அங்கு வெற்றிடம் உருவாகும். அதினால் கண்ணாடி உடைந்து விடும் என்று மூடி கூறினார். இன்னும் அநேகர் வெவ்வேறு கருத்துக்களைச் சொன்னார்கள். அப்போது அவர் ஒரு பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து அந்த டம்ளரில் நிறைய ஊற்றி, “இப்போது இதில் கொஞ்சம்கூட காற்று இல்லை. தண்ணீரை ஊற்றியவுடன் காற்று எடுக்கப்பட்டு விட்டது” என்றார்.


அவர் இந்த சிறிய உதாரணத்தின் மூலம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்றுக் காட்டினார். பாவத்தை அங்கும் இங்கும் உறிஞ்சி எடுப்பதால் அது போய் விடாது என்றும், நாம் பாவமில்லாத வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய இருதயம் நிரப்பப்பட வேண்டும் என்றும் விளக்கினார். பின்னும் அவர், ‘நம்முடைய இருதயத்திலிருந்து பெருமையும் சுயநலமும் மற்றும் பாவமான காரியங்களும்; விலகும்போது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய முழு இருதயத்தையும் நிரப்புவார்’, ஆனால் நம் இருதயம் அப்பாவங்களினால் நிறைந்திருந்தால் பரிசுத்த ஆவியானவருக்கு அங்கு இடமில்லை என்றுக் கூறினார். நம்முடைய இருதயம் உலக காரியங்களுக்கு வெறுமையாக்கப்படாலொழிய ஆவியானவர் அதை நிரப்ப முடியாது என்றும் கூறினார்.


அதுப் போல நாம் நம்மையே வெறுமையாக்கி ஆவியானவரை நம் இருதயத்திற்குள் அழைப்போம். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். அவர் வந்து நம் இருதயத்திற்குள் வாழும் போது எந்த பாவமும் நம்மை நெருங்காது. கர்த்தர் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வார். மட்டுமல்ல சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார். - யோவான் - 14:8:13.


ஒவ்வொரு நாளும் அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து நாம் வாழும்போது அவர் நம்முடைய வாழ்வை பொறுப்பெடுத்துக் கொள்வார். சிலர் பரிசுத்த ஆவியை அளவில்லாமல் நான் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு பிரசங்கிமாரிடம் போய் நிற்கிறார்கள். நீங்கள் உங்களை எவ்வளவு வெறுமையாக்குகிறீர்களோ அந்த அளவு அவர் உங்களை நிரப்புவார். எந்த பிரசங்கிமாரும் கடவுள் அல்ல உங்களுக்கு பரிசுத்த ஆவியை அதிகமாய் கொடுப்பதற்கும், மற்றவர்களுக்கு குறைவாக கொடுப்பதற்கும்.
முதலாவது நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது பரிசுத்த ஆவி அல்ல, அவர் பரிசுத்த ஆவியானவர்.அவர் திரியேக தெய்வத்தின் ஒரு தன்மையானவர். அவர் பாவிகளான நம்முடைய இருதயத்தில் வாசம் செய்வது அவருடைய சுத்த கிருபையாகும்.


நாம் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பது மிகவும் அவசியம். அவர் நமக்குள் இருந்தால் தான் நாம் ஆவியின் கனியை வெளிப்படுத்த முடியும். நாம் இரட்சிக்கப்பட்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இல்லாவிட்டால், நாம் பாவத்திற்குள் திரும்ப விழ வேண்டிய நிலைமை ஏற்படலாம். "பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்று இயேசுகிறிஸ்து கூறினார். அதுவரை கோழையாக இருந்த பேதுரு பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொண்ட பிறகு வல்லமையான பிரசங்கியாக மாறினார். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்ட அநேகர் கர்த்தருக்கென்று வல்லமையாக உபயோகிக்கப்படுவதை காண்கிறோம். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வோம். நமது வாழ்க்கை நிச்சயமாகவே மாறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. சாத்தானை எதிர்த்து நிற்க வல்லமை தருவார். அவர் வாழும் ஆலயமாக நம் இருதயம மாறட்டும். அல்லேலூயா!


ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனே

துதிக்கத் தூண்டும் துணையாளரே

சாத்தானின் சகல தந்திரங்களை

சாகடிக்க வாருமையா



ஜெபம்:
எங்களை நேசிக்கும் எங்கள் பரம தகப்பனே, பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் வாஞ்சையைத் தாரும் ஐயா. அவரைப் பெற்றுக் கொண்டு, சாத்தானுக்கு எதிர்த்து நிற்கவும், பாவத்திலிருந்து ஜெயமுள்ள வாழ்க்கை வாழவும் எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

Thursday, January 21, 2010

அனுதின மன்னா ஜனவரி 21

கர்த்தருடைய நீதி

நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது. - ஏசாயா 64:6.


ஒரு ஓவியர் 'கெட்டகுமாரன்' என்ற தலைப்பில் ஓவியம் வரைவதற்காக அதற்கேற்ற மாடல் வேண்டும் என்று நியூயார்க் நகரத்தின் தெருக்களில் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பிச்சைக்காரன் ஒரு பார்க்கில் (Park) ஒரு பெஞ்சின் மீது படுத்துக் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே இந்த பிச்சைகாரன்தான் தனது ஓவியத்திற்கு சரியான மாடல் என்று தீர்மானித்து, அந்த பிச்சைக்காரனை தட்டி எழுப்பி, நான் ஒரு ஓவியம் வரைய இருக்கிறேன். அதற்கு நீதான் சரியான மாடல், ஆகவே நாளை இந்த நேரம் என்வீட்டுக்கு வா என்று கூறி வீட்டு விலாசத்தையும் கொடுத்து, உனக்குச் சரியான சன்மானம் கொடுப்பேன் என்று கூறினார். அதற்கு அந்த பிச்சைக்காரனும் ஒத்துக் கொண்டான்.


அடுத்த நாள் அவர் சொன்ன அதே நேரத்தில் கதவு தட்டப்பட்டது. ஒரு வாலிபன் முகத்தில் சவரம் செய்துக் கொண்டு, நல்ல உடை அணிந்து, வந்திருந்தான். அதைக் கண்ட அந்த ஓவியர், 'நீங்கள் தவறான விலாசத்துக்கு வந்திருக்கிறீர்கள். நான் உங்களை வரச் சொல்லவில்லை, நான் ஒரு பிச்சைக்காரனைத்தான் வரச் சொல்லியிருந்தேன்' என்றுக்கூறினார். அதற்கு அந்த வாலிபன் 'ஐயா நான் தான் அந்த பிச்சைக்காரன். நீங்கள் சொன்னவுடன் நான் என் கையில் இருநத பணத்தை வைத்து உடை வாங்கி அணிந்து வந்தேன்' என்றான். அதற்கு அந்த ஓவியர் ' நீ என்னுடைய
ஓவியத்திறகு இப்போது சரியான மாடல் இல்லை ' என்று கூறி அவனை அனுப்பிவிட்டார்.


அந்த பிச்சைக்காரன் தன்னை ஒரு சிறந்தவனாக அந்த ஓவியத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்று தன்னை தயார் படுத்திக் கொண்டு வந்திருந்தான். ஆனால் ஓவியரோ அவனை அவனாகவே வரைய விரும்பினார். அப்படித்தான் நாம் கர்த்தரிடம் வரும்போது நம்முடைய சுயநீதியில் நம் பெருமையில், வரக்கூடாது. நம்முடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தை என்று தேவன் அறிவார். அவரிடமிருந்து நாம் எதையும் மறைக்க முடியாது. நாம் இருக்கிற வண்ணமாகவே அவரிடம் வரும்போது அவர் தம்முடைய நீதியினால் நம்மை நீதிகரிப்பார்.


இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று, தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர்,
விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்;

ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் லூக்கா 18:10-14 என்று இயேசு கிறிஸ்துக் கூறினார். ஆயக்காரனைப் போல நமது நீதி ஒன்றுமில்லை என்றும், என் மேல் கிருபையாயிரும் என்றும் ஜெபித்தால் அவர் கிருபையாக நம்மை மன்னித்து அவரது நீதியையே நமக்குக் கொடுப்பார். அவரது சமுகத்தில் நம்மை எவ்வளவு தாழ்த்துகிறோமோ அவ்வளவு கிருபைகளை அவர் நமக்குத் தருவார்.



தாங்கி நடத்தும் கிருபை இது

தாழ்வில் நினைத்த கிருபை இது

தந்தையும் தாயும் கைவிட்டாலும்

தயவாய் காக்கும் கிருபை இது



ஜெபம்:
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தை என்பதை நீர் அறிந்திருக்கிறீர். நாங்கள் இருக்கிற வண்ணமாகவே உம்மிடத்தில் வருகிறோம் தகப்பனே. எங்களை ஏற்றுக் கொண்டு உம்முடைய கிருபையினால் வழிநடத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.





கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

Wednesday, January 20, 2010

நான் இன்று முதல் உன்னை ஆசிர்வதிப்பேன் (ஆடியோ)

சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கிய தேவ செய்தி (ஆடியோ)

கர்த்தர் நன்மையானதை தருவார் (ஆடியோ)

சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கிய தேவ செய்தி (ஆடியோ)

அனுதின மன்னா ஜனவரி 20

தேவன் நம் பட்சத்தில்

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். - யாக்கோபு 4:7.


ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒருவர் நின்று அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிங்கம் இருந்த கூண்டுக்குள் அங்கு வேலை செய்கிற ஒரு மனிதன் தன் கையில் ஒரு துடைப்பத்துடன் உள்ளே நுழைந்ததைப் பார்த்தார். அந்த மனிதன் அங்கு சுத்தம் பண்ண ஆரம்பித்தான். சிங்கம் இருந்த இடத்திற்கு வந்தவுடன் தன் கையில் உள்ள துடைப்பத்தால், அந்த சிங்கத்தை உசிப்பி விட்டவுடன், அந்த சிங்கம் அவனைப் பார்த்து ஒரு புர்ர்ர் என்று உறுமிவிட்டு, எழுந்து வேறிடத்தில் போய் படுத்துக் கொண்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர், ஓ.....இந்த மனிதன் மிகவும் தைரியம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும், என்று எண்ணி, அந்த மனிதனிடம் போய், 'நீர் மிகவும் தைரியமாக இருக்கிறீர், தைரியமாக உள்ளே நுழைந்து அந்த சிங்கத்தை உசிப்பி விட்டீரே, அந்த சிங்கம் உம்மேல் பாய்ந்து கடிக்கும் என்று பயமில்லையா?' என்றுக் கேட்டார்.

அதற்கு அந்த மனிதன் 'இல்லை, நான் தைரியமானவன் இல்லை' என்றுக் கூறினான். அப்போது அந்த மனிதர், ‘அப்படியானால் அந்த சிங்கம் நன்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்றுக் கூறினார். அப்போது அந்த மனிதன், ‘நான் தைரியவானும் இல்லை, இந்த சிங்கம் பயிற்சி பெற்றதும் இல்லை, ஆனால் இந்த சிங்கம் வயதானது, அதற்கு பல்லும் இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடியாது’ என்றுக் கூறி சிரித்தான்.


அப்படித்தான் நம் வாழ்விலும் பிசாசு வந்து சிலவேளைகளில் பயமுறுத்திப் பார்க்கிறான். ஆனால் அவன் தலையை கிறிஸ்து இயேசு சிலுவையில் நசுக்கி விட்டார். அவன் தோற்றுப் போனவன். 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்' - யாக்கோபு. 5:8 என்றுப் பார்க்கிறோம். எந்த சிங்கமாவது விழுங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? சிங்கம் என்றால் கடித்துச் சாப்பிடுமே ஒழிய விழுங்காது. பிசாசானவன் விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான் ஏனென்றால்; அவன் பல் பிடுங்கப்பட்ட சிங்கம். அவன் தலையை நம் இயேசுகிறிஸ்து சிலுவையிலே நசுக்கிவிட்டார். அவன் கெர்ச்சித்து பயமுறுத்துவானே ஒழிய அவனால் ஒன்றும் செய்ய முடியாது.


அவன் உங்கள் வாழ்க்கையில் கெர்சிக்கிற சிங்கத்தைப் போல பயமுறுத்தலாம், ஆனால் அதைக் கண்டு பயந்து விடாதீர்கள். உங்கள் வேலை இடத்தில், உங்கள் அனுதின வாழ்க்கையில், அவன் பல தந்திர வேலைகளைச் செய்யலாம். ஆனால் பயப்படாதிருங்கள். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். நீங்கள் கர்த்தரை சார்ந்து ஜீவிப்பீர்களானால், உங்களுக்கு எதிராக கூட்டங் கூடினவர்கள் உங்கள் பட்சத்தில் வருவார்கள். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்?


உங்கள் வேலையிடங்களில், உண்மையாய் வேலை செய்யுங்கள், கடினமாய் உழையுங்கள். உங்கள் அதிகாரிகள் பார்க்க வேண்டும் என்று வேலை செய்யாமல் கர்த்தர் பார்க்கிறார் என்று வேலை செய்யுங்கள். கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருப்பதைக் காண்பீர்கள். என்னுடைய வேலையிடத்திலும், என் அதிகாரி காரணமில்லாமல் எனக்கு விரோதமாக இருந்தார்கள். ஆனால் விடாமல் அவர்களுக்காக அவர்கள் பெயரைச் சொல்லி ஜெபித்தேன். கர்த்தர்
எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப்போட்டார். கர்ததர் என் வேலையிடத்தில் விசேஷித்த
ஞானத்தைக் கொடுத்து என்னை உயர்த்துவதை என்னால் நன்கு உணர முடிந்தது. கர்த்தர் நம்மோடு பயங்கர பராக்கிரமசாலியாய், ஞானம் நிறைந்தவராய், எல்லாவற்றிலும் நம்மை வழிநடத்துகிறவராய் இருக்கும்போது நாம் எந்த மோசமான அதிகாரிக்கும் கலங்க தேவையில்லை. நமக்கு விரோதமாய் எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். ஆமென் அல்லேலூயா! கர்த்தர் நமக்கு வெற்றியைத் தருவார். அவரை மாத்திரம் விடாமல் பற்றிக் கொள்ளுங்கள்.




உனக்கெதிராய் எழும்பும் ஆயதம்

வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்

நீர் அறியா யாதும் நேரிடா

என் தலை முடியும் எண்ணினீரே



ஜெபம்:
எங்களை நேசிக்கும் நல்ல தகப்பனே, சத்துரு எங்களை விழுங்க வகைத்தேடும்போது எங்களை உம்முடைய மறைவிடத்தில் வைத்து காப்பவரே உம்மை துதிக்கிறோம். நீர் எங்கள் பட்சத்தில் இருக்கும்போது எங்களுக்கு விரோதமாய் இருப்பவன் யார் ஆண்டவரே! உங்களை தொடுபவன் என் கண் மணியைத் தொடுகிறான் என்றுச் சொல்லி எங்களை உம்முடைய கண்ணின் மணிப்போல காப்பவரே உம்மைத் துதிக்கிறோம். எங்கள் துதிகளை உம்முடைய நாமத்திற்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Tuesday, January 19, 2010

அனுதின மன்னா ஜனவரி 19

அன்பாயிருங்கள்

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும்
ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். - யோவான். 13:34-35.



இந்த கடைசி காலங்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் வருகை மிக சமீபமாயிருக்கிறபடியால் எழுப்புதலை அனுப்பும் தேவா என்று விடாமல் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் தேசங்களை சந்தியும் ஆண்டவரே, உம்மை அறியாத ஜனங்களுக்கு உம்மை வெளிப்படுத்தும், என்று தொடர்ந்து திறப்பின் வாசலில் நின்று ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் மக்கள் இயேசுவை அறியாமல் மரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு பெரிய எழுப்புதல் நம் தேசத்தை இன்னும் அசைக்கவில்லை.
அறுவடைக்கு கதிர்கள் தயாராக உள்ளன. ஆனால் அதை அறுப்பதற்கு போதுமான ஆட்கள் இல்லை ஏன் இந்த நிலைமை?


நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆனால் விசுவாசிகளுக்குள்ளே இன்று அன்பு எங்கே இருக்கிறது? சபையாகிய சரீரத்திற்குள்தான் எத்தனை பிரிவினைகள்? சின்ன சின்னக் காரியங்களுக்கெல்லாம் சண்டையிட்டு, சபைகள் பிரிந்து தனியாக ஒரு சபை ஆரம்பிக்கப்படுகிறது. சத்துரு நம்மை பிரிக்கவேண்டும் என்கிற அவனது தந்திரத்தை நாம் அறியாமல் நமக்குள்ளே பிரிவினைகளை அனுமதித்துக் கெண்டு இருக்கிறோம்.


விளைநிலங்கள் அறுவடைக்கு ஆயத்தமாய் இருக்கின்றன. ஆனால் அவைகளை அறுக்க நாம்
ஆயத்தமாக இல்லையே! நாம் நம்முடைய பிரச்சனைகளயே நோக்கிக் கொண்டு இருக்கிறோம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டும், நான் பெரியவன், நீ பெரியவன் என்றும் போட்டியிட்டுக் கொண்டும் இருக்கிறோம். இவைகளையெல்லாம் விட்டுவிட்டு, தூசியை உதறிவிட்டு எழுந்தரிப்போமா? ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோமா? கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் ஒரே அவயங்களாயிருக்கிறோமே, ஒரு அவயத்திற்கு விரோதமாய இன்னொரு அவயவம் எப்படி இருக்க முடியும்?


பிரச்சனைகளை நோக்காமல் பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்போம். ஒன்று
சேருவோம், அழிந்துப் போகிற ஆத்துமாக்களுக்காக ஒன்றிணைந்து திறப்பின் வாசலில் நிற்போம். நாம் ஒருவரிலொருவர் அன்பாய் இருப்பதால், ஒன்றாய் இருப்பதால் சத்துருவுக்கு அங்கு இடமில்லை. சிறு வயதில் நாம் கற்ற உதாரணம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான்கு மாடுகள் ஒன்றுக்கூடி மேய்ந்துக் கொண்டிருந்தபோது அங்கு அவைகளை அடித்து சாப்பிட எத்தனித்த சிஙகத்திற்கு அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அந்த மாடுகள் சண்டையிட்டு தனித்தனியாக மேய்ந்துக் கொண்டிருந்தபோது, மிகவும் சுலபமாக அந்த சிங்கம் ஒவ்வொரு மாடாக அடித்து ஏப்பம் விட்டதைப் படித்திருக்கிறோம்.


இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங்கீதம் 133:1 என்று வேதம் சொல்கிறது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள் அப்போஸ்தலர் 2:44. என்று ஆதிகால கிறிஸ்தவர்களைக் குறித்து நாம் காண்கிறோம். அந்நாட்களில் விசுவாசிகள் ஒருமித்து இருந்தபடியால்தான், கர்த்தருக்கென்று ஆச்சரியமான, அற்புதமான காரியங்களை அவர்களால் செய்ய முடிந்தது. இன்று அந்த அதிசயஙகள், அற்புதங்கள் நடைபெற்று நாம் புறஜாதிகளுக்கு முன் நம் கர்த்தரே தெய்வம் என்று வெளிப்படுத்த வேண்டுமானால் ஒரு மனம் மிக மிக முக்கியம்.ஒருமனப்படும் இடத்தில் தான் கர்த்தரின் ஆவியானவர் கிரியை செய்ய முடியும். ஒருமனப்பட்டு சாத்ட்னுக்கு எதிர்த்து நிற்போம். அவன் ஓடிப் போவான். நாம் அறுப்பதற்கு, விளைநிலங்கள் தயாராக உள்ளன. உடனே வேலையை ஆரம்பிப்போமா?


விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு

அன்பு ஒன்றே அவர்கள் நடுவில் உண்டு

ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு

என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்



ஜெபம்:
எங்களை நேசிக்கிற எங்கள் அன்பு தகப்பனே, நீர் எங்களை நேசித்து, உமது ஒரேப்போறான குமாரனை எங்களுக்காக தந்தருளினீரே, அதே அன்பை நாங்கள் எங்கள் சகோதரரிடத்தில் வெளிப்படுத்த, அவர்களை நாங்கள் நேசிக்க எங்கள் இருதயத்தில் அன்பை ஊற்றும் தகப்பனே. அறுவடைக்கு தயாராக இருக்கிற விளைநிலங்கள் நாங்கள் ஒருவரிலொருவர் அன்பாய் இருப்பதை கண்டு உம்மிடத்தில் சேர கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

Monday, January 18, 2010

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். - (ஏசாயா 53:5-6).


அனுதின மன்னா ஜனவரி 18

தப்புவிக்கும் கரம்

கர்த்தர் கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. - (சங்கீதம் 107:29).


ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand) என்னும் ரோமானிய யூதர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினால் கம்யூனிச சிறையில் அடைக்கப்பட்டு, 14 வருடங்கள் மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு, தாம் கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையை மறுதலிக்குமாறு வற்புறுத்தப்பட்டார். ஆனால் அவர் விடுதலையாகும் வரைக்கும் கர்த்தரை மறுதலிக்கவேயில்லை. அவர் தாம் எழுதிய பட்ங் ஞழ்ஹஸ்ரீப்ங்ள் ர்ச் ஏர்க் என்ற புத்தகத்தில், அந்த சிறைச்சாலையின் கொடூரமான சூழ்நிலையிலும் அமைதியோடும், சமாதானத்தோடும் எப்படி தன்னால் இருக்க முடிந்தது என்பதை ஒரு சிறு கதையின் மூலம் விளக்கி எழுதியுள்ளார்.

ஒரு கப்பலில், அந்தக் கப்பலின் மாலுமியோடு அவரது மனைவியும் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தக் கடலில் ஏற்பட்ட புயலினால் கப்பல் அங்கும் இங்கும் அலைமோதியது. அப்போது அந்த மாலுமியின் மனைவி அவரிடம், "இந்தமாதிரி கப்பல் அலைமோதி தடுமாறிக் கொண்டிருக்கும் போது உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது? "என்றுக் கேட்டாள். அப்போது அந்த மாலுமி அருகிலிருந்த ஒரு கத்தியை எடுத்து தன் மனைவியின் நெஞ்சுக்கு நேராக வைத்து, "நீ இப்போது எப்படி அமைதியாகவும் பயப்படாமலும் இருக்கிறாய்" என்றுக் கேட்டார். அதற்கு அவள், "நான் ஏன் பயப்படவேண்டும்? இந்தக் கத்தி என் அன்புக் கணவனது கரங்களில் அல்லவா இருக்கிறது? நீங்கள் என்னை நேசிக்கிறபடியால், என்னை குத்த மாட்டீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்" என்றுக் கூறினாள்.


அப்போது அந்த மாலுமி, "அதுதான் நான் அமைதியாய் இருப்பதன் காரணமும்கூட, இந்த அலைகளும் கொந்தளிப்பும் என் அன்பு தகப்பனின் கரங்களில் இருப்பதால், அவருக்கு இந்த அலைகளும் அடங்கும் என்பதால் நான் இந்தப் புயலைக் குறித்து பயப்படாமல் இருக்கிறேன்." என்று கூறினார்.


அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையில் புயல் வீசிக் கொண்டிருக்கிறதா? என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? எங்கு போவது என்று தெரியாமல் நிலைத் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களா? நமக்கு ஒரு தேவன் உண்டு. அவர் காற்றையும் கடலையும் அதட்டி அமைதலாயிரு என்று கட்டளையிட்டு புயலை அமைதலாக்கினவர். அவர் உங்க்ள வாழ்க்கையில் ஏற்படும் புயலையும் அலைகளையும், காற்றையும் அமைதலாக்க வல்லவர். கவலைப்படாதீர்கள். சோர்ந்துப் போகாதிருங்கள். 'என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்'. - (எரேமியா -33:3) என்றவர் இன்றும் மாறாதவராகவே இருக்கிறார்.

அவர் பட்சபாதமுள்ள தேவனில்லை. அவரை நோக்கி கூப்பிடும் உங்களிடத்தில் நிச்சயமாகவே வந்து அற்புதங்களை செய்வார்;. நீங்கள் கலங்க வேண்டாம். தேவனை உறுதியாய் பற்றிக் கொள்ளுங்கள். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது- (ஏசாயா 43:2). என்று சொன்னவர் உங்களோடு இருக்கிறார். நீங்கள் இந்தப் புயலில் மூழ்கிப் போவதில்லை கர்த்தரின் கரம் உங்களை தாங்கும் தப்புவிக்கும் ஆமென் அல்லேலூயா!


கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்

சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா

கடலினை கண்டித்த கர்த்தர் நீரல்லவோ

கடவாத எல்லையை என்வாழ்வில் தாரும்



ஜெபம்:
எங்களது அடைக்கலமும் புகலிடமுமாகிய எங்கள் நல்ல தகப்பனே, எந்த புயல் வந்து மோதினாலும் நாங்கள் அசைக்கபடாதபடி எங்கள் நங்கூரமாக நீர் இருந்து எங்களை தாங்குவதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரம். இந்த உலகத்தில் இருப்பவனிலும் எங்களுக்குள் இருக்கிற நீர் பெரியவர், பெரிய காரியங்களை எங்களுக்காக செய்கிறவர். அதற்காக நன்றி தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. எங்கள் துதிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

Sunday, January 17, 2010

அனுதின மன்னா ஜனவரி 17

நீதிமானின் சந்ததி

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.- நீதிமொழிகள். 22:6.


பிரசித்திப் பெற்ற ஊழியக்காரனான ஆஸ்வால்ட் ஸான்டர்ஸ் (J.Oswald Sanders) தாம் எழுதிய A spiritual Clinicஎன்னும் தமது புத்தகத்தில் நியூயார்க் நகரத்தில் இருந்த இரண்டு குடும்பங்களின் தலைமுறைகளின் வரலாற்றை ஒப்பிட்டு பார்த்து, அவர் ஒரு விசேஷித்த காரியத்தை கீழ்கண்டவாறு கண்டறிந்தார்.


முதலாவது குடும்பம் மேக்ஸ் ஜூக்ஸ் (Max Jukes).அவர் கடவுள் பக்தியில்லாதவராக, துன்மார்க்க ஜீவியம் செய்தவராக இருந்தார். அவர் மணந்த பெண்ணும் ஒரு கொள்கையில்லாதவளாய் கடவுள் பயம் இல்லாதவளாக இருந்தாள். அவர்களுடைய தலைமுறைகளில் வந்தவர்களில் 1200 பேரை வைத்து கணக்கெடுக்கப்பட்டது. அதில் 310 பேர் மிகவும் ஏழ்மையான நிலையில் ஒரு வீடும் வேலையும் இல்லாமல் கஷ்டமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 440 பேர் தங்களது ஒழுக்கமில்லாத வாழ்க்கையினால் தங்கள் சரீரங்களில் வியாதிகளை வரவழைத்துக் கொண்டார்கள். ஒருவருக்கு 13 வருடம் வீதம் 130 பேர் தங்களது துஷ்ட நடவடிக்கைளினால் சிறைக்கு அனுப்பபட்டார்கள். 100 பேர் குடியர்களாகவும், 60 பேர் திருடர்களாகவும், 190 பேர் விபச்சாரிகளாகவும் இருந்தனர். இவர்களது இந்த நிலையினால் அரசாங்கத்துக்கு 1,500,000 டாலர்கள் வீண் செலவு விரயமானது.


அடுத்த குடும்பம் ஜோனத்தான் எட்வர்ட் (Jonathan Edward) குடும்பம். அவர் தேவனுடைய
மனிதனாக கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்தவர். அவர் மணந்த பெண்ணும் கர்த்தருக்கு பயந்தவர்கள், ஊழிய அழைப்பு பெற்றவர்கள். அவர் குடும்பத்தில் வந்த தலைமுறையில் 300 பேர் போதகர்களாகவும், மிஷனெரிகளாகவும், வேதாகம கல்லூரியில் பேராசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். 100 பேர் பேராசியர்களாகவும், 100 பேர் சிறந்த வக்கீல்களாகவும், 30 பேர் நீதிபதிகளாகவும், 60 பேர் வைத்தியர்களாகவும், 14 பேர் கல்லூரிகளில் துணை முதல்வர்களாகவும் ஒருவர் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதியாகவும் இருந்தனர். அநேகர் அவரது குடுமபத்திலிருந்து நல்ல செல்வாக்கு மிக்கவர்களாகவும், நாட்டில் உயர்ந்த நிலைகளில் இருந்ததாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது. அவர்களது குடும்பத்தினால் அரசாங்கத்திறகு மிகுந்த வரவு வந்ததென்று குறிப்புகள் கூறுகின்றன.


நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள் (நீதிமொழிகள் 20:7). நீங்கள் நீதிமானாயிருந்தால் உங்களுக்கு பின்வரும் சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்கும். இது நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்துள்ளது. நீங்கள் கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடந்தால் 128 ஆம் சங்கீதத்தில் கூறப்பட்டுள்ள அத்தனை ஆசீர்வாதங்களும் உங்களையும் உங்கள் சந்ததியையும் சாரும் . துன்மார்க்கனுடைய சந்ததி துனமார்க்கமாக இருக்கும் என்பதற்கு மேலே கூறப்பட்ட உதாரணமே சாட்சி. நம்முடைய வாழ்வும், நாம் பின்வைத்து போகும் நமது அடிச்சுவடிகளும் நம்முடைய சந்ததிக்கு ஆசீர்வாதமா அல்லது சாபமா என்பது நாம் வாழும் இந்த வாழ்க்கையே உறுதிப்படுத்தும். ஆகவே கர்த்தருக்கென்று வாழ்வோம், விசுவாசமுள்ள சந்ததியை இந்த உலகததிற்கு கொடுப்போம். நாமும் நம் குடும்பமும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.


நானும் என் வீட்டாருமோவென்றால்

கர்த்தரையே சேவிப்போம்

நீயும் சேவிப்பாயா? நீயும் சேவிப்பாயா?



ஜெபம்:
எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல பிதாவே, எங்களது வருங்கால சந்ததி கர்த்தருக்கு பிரயோஜனமாகவும், உலகிற்கு ஆசீர்வாதமாகவும், சபைக்கும் சமுதாயத்திற்கும் பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கும்படியாக எங்களது வாழ்க்கை நல்ல ஒரு உதாரணமாக இருக்க கிருபைச் செய்யும். எங்களது சந்ததியில் யாரும் கெட்டவர்களாகவோ தீமை செய்கிறவர்களாகவோ இல்லாதபடி நீர் விரும்பும் குடும்பங்களாக எங்கள் குடும்பங்களை மாற்றும். எங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கு பயப்படும் பயத்தில் வளர்க்க பெற்றோராகிய எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

Saturday, January 16, 2010

அனுதின மன்னா ஜனவரி 16

கடவுள் இருக்கிறார்

தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். (சங்கீதம் 53:1)


ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ மனிதர், தன் முடியை வெட்டிக்கொள்வதற்காக ஒரு நாவிதனிடம் (Barber) சென்றிருந்தார். அப்போது இரண்டு பேரும் நாட்டு நடப்புகளையும் மற்றும் அநேக காரியங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சு மத சம்பந்தமான நம்பிக்கையைக் குறித்து வந்த போது அந்த நாவிதன் எனக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கை இல்லை என்று கூறினான். அதற்கு கிறிஸ்தவர் ஏன் என்று கேட்டார். அதற்கு நாவிதன், “கடவுள் என்று ஒருவர் உண்டென்றால் ஏன் மக்கள் பட்டினியால் மடிய வேண்டும்? ஏன் அனேகர் நோயாளிகளாகக் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் என்று ஒருவர் இருந்தால் கஷ்டம் வேதனை என்று ஒன்றும் இருக்காது, ஒரு அன்புள்ள கடவுள் இவற்றையெல்லாம் அனுமதிக்கமாட்டார்" என்றுக் கூறினான். அந்த கிறிஸ்தவர் பதில் சொல்ல யோசித்துவிட்டு, ஏன் வீணாக வாக்குவாதம் பண்ண வேண்டும் என்று நினைத்து ஒன்றும் பேசாமல் தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்தார். அவர் வெளியே வந்த போது, ஒரு மனிதன் மிக நீளமான தாடியுடனும், நீளமான அழுக்கு தலைமுடியுடனும் நின்றுக்கொண்டிருந்தான். அவனைக் கண்டவுடன் அந்த கிறிஸ்தவர் திரும்பவும் அந்த நாவிதனிடம் சென்று, 'உனக்குத் தெரியுமா இந்த உலகத்தில் நாவிதர்களே இல்லை' என்றுக் கூறினார். அதற்கு அந்த நாவிதன், "நீர் எப்படி அப்படிச் சொல்லலாம்? நான் இங்கே இருக்கிறேன், உமக்கு தலைமுடியை நான் இப்போது தானே வெட்டினேன்" என்று வேகமாக கூறினான். அப்போது அந்த கிறிஸ்தவர், 'இல்லை நாவிதர்கள் என்பவர்கள் இல்லை, அப்படி இருந்தால், இந்த மாதிரி ஒரு மனிதன் இப்படி அழுக்கு முடியோடு வெட்டாமல் இருப்பானா' என்றுக் கேட்டார். அதற்கு நாவிதன், 'நாவிதர்கள் இருப்பது உண்மை, ஆனால் இந்த மனிதர்கள் என்னிடம் வருவதில்லை, அதனால்தான் இப்படி இருக்கிறார்கள்' என்றுக் கூறினான்.


அப்போது அந்தக் கிறிஸ்தவர் கூறினார், "சரியான பாயிண்டைச் சொன்னாய். அதுப் போலத்தான் ஆண்டவரும் இருக்கிறார். ஆனால் மனிதர்கள் அவரைத் தேடுவதில்லை, அவரிடம் போவதில்லை,அதனால் தான் இந்த உலகத்தில் இத்தனை பாடுகளும் வேதனைகளும்" என்றுக் கூறிவிட்டு ஒரு மனிதனை கர்த்தரை நம்ப வைத்த திருப்தியில் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்.


நம்மை சுற்றி இருக்கிற இயற்கையின் அழகேச் சொல்லும், அவற்றை படைத்த தேவன் ஒருவர் இருக்கிறார் என்று. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப் போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை. - (சங்கீதம் 19:1-6). இவைகளையெல்லாம் படைத்தவர் நம் தேவாதிதேவனல்லவா? நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். ஆம், நம்முடைய உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றுமே கர்த்தர் ஒருவர் உண்டு என்பதையும், அவர் எத்தனை ஞானமுள்ளவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது.


என் ஆண்டவா மாலைநேரம்
அடிவானம் தோன்றும் காட்சி
என் ஆண்டவா தூதன்தானோ
ஒவியமோ செய்கின்றானோ?
என் ஆண்டவா சொல்லித்தாரும்
தோற்றங்களின் நுட்பமெல்லாம்

என் ஆண்டவா ஆற்றித்தேற்றும் காட்சி மூலம் ஏழை நெஞ்சை



ஜெபம் :
எங்களைப் படைத்த நல்ல ஆண்டவரே, நீர் இருக்கிறீர் என்பதை நாங்கள் விடும் ஒவ்வொரு சுவாசக் காற்றும் வெளிப்படுத்துகிறது.உமது சித்தமில்லாமல் எங்கள் இருதயமும் துடிக்காது. சகலத்தையும் படைத்த சிருஷ்டி நாயகர் ஒருவர் உண்டு என்பதை கர்த்தர் இல்லை என்று சாதிக்கிற ஒவ்வொருவருக்கும் வெளிப்படுத்தும் ஆண்டவரே. எங்கள் வாழ்க்கையில் நீரே அரசாளும் தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

Friday, January 15, 2010

அனுதின மன்னா ஜனவரி 15

முழு பலதோடு தள்ளு

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்,அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். - நீதிமொழிகள் 3:5,6.


ஒரு மனிதன் தன் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று இந்த அறை பிரகாசித்தது. ஆண்டவர் அங்கு தோன்றினார். அவர் சொன்னார், "மகனே நீ எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும், உன் வீட்டிற்கு முன் இருக்கிற அந்த பெரிய பாறாங்கல்லை உன் முழு பெலத்துடன், தள்ளவேண்டும்" என்றார். அந்த மனிதனும் ஒத்துக் கொண்டு, காலையும் மாலையும் தள்ள ஆரம்பித்தான். பகலிலே சூரிய வெயிலிலும், இரவிலே பனியிலும் இருந்து, தொடர்ந்து வருடக்கணக்கில் தள்ளிக்கொண்டே இருந்தான். ஆனால் ஒரு சிறுத் துளியும் அந்த கல் நகரேவேயில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும், ஏமாற்றத்தோடே 'இந்த நாளில் நான் தள்ளியதெல்லம் வீண், ஒரு இன்ச் கூட (Inch) அந்தக் கல் நகரவேயில்லையே என்று மிகவும் ஏமாற்றத்தோடு அவன் படுக்கைக்குச் செல்வான்.


அவன் ஏமாற்றத்தோடு இருப்பதை கவனித்த சாத்தான் அவனை இன்னும் சோர்வடையச் செய்ய வேண்டும் என்று அவனிடம் வந்து, 'நீ இத்தனை நாள் அந்தக் கல்லை தள்ளினாயே ஏதாவது பயனுண்டா?' என்றுக் கேட்டான். அதற்கு அந்த மனிதன், 'ஆம் நான் ஒவ்வொரு நாளும் தள்ளியும் ஒரு பிரயோஜமுமில்லை, அந்தக் கல் கொஞ்சம்கூட நகரவேயில்லை' என்றான். அதற்கு சாத்தான், அப்படியானால் நீ உன்னையே எதற்காக வாட்டிக் கொள்கிறாய்? உன் முழு சக்தியையும் பிரயோகித்து நீ ஏன் தள்ள வேண்டும்? கொஞ்சமாக சக்தியை பிரயோகி, கொஞ்ச நேரம் தள்ளிவிட்டு வந்துவிடு என்று அவனது காதில் ஓதினான். அவன் அதற்கு சம்மதித்து இனிமேல் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று எண்ணியபடி, முதலில் ஆண்டவரிடம் ஜெபித்து தன் மனதிலுள்ள கேள்விகளை அவரிடமே கேட்டு விட வேண்டும் என்று எண்ணி ஆண்டவரிடம் ஜெபத்தில், 'நான் அநேக நாட்களாக வருந்தி, நீர் எனக்கு கொடுத்த வேலையை உண்மையாய் செய்து வந்தேன். ஆனால் அதற்கு சிறிதளவுக் கூட பலனில்லையே? ஏன் நான் எதில் தவற விட்டேன் என்று எனக்குச் சொல்லும்' என்று கேட்டான். அதற்கு ஆண்டவர், "மகனே, நான் உன்னிடம் எனக்காக வேலை செய்ய வேண்டும், உன் முழு பெலத்துடன் அந்தக் கல்லை தள்ள வேண்டும் என்று கேட்டபோது நீயும் ஒத்துக் கொண்டு உன் முழு பெலத்தோடு தள்ளினாய், நான் அந்தக் கல்லை நகர்த்த வேண்டும் என்று உன்னிடம் சொல்லவேயில்லையே! உன்னுடைய வேலை தள்ள்வேண்டியது மட்டும்தான். இப்போது நீயாக நீ தவறி விட்டாய் என்று என்னிடம் வந்துச் சொல்கிறாய், உன்னை இப்போது பார்! உன் கைகள் வலிமை மிக்கதாக மாறி விட்டன, உன் கால்கள் உறுதியாய மாறி விட்டன. அந்த பாறாங்கல்லை தள்ளி உன் உடலின் ஒவ்வொரு உறுப்பும் மிகவும் சக்திவாய்ந்ததாக, நீ முதலில் இருந்தததை விட பலமடங்கு உறுதி வாய்ந்ததாக மாறிவிட்டது. உன்னுடைய அழைப்பு, நீ எனக்கு கீழ்ப்படிந்து, விசுவாசத்தோடே தள்ளவேண்டியது மட்டுமே,. இப்போது நான் அந்தக் கல்லை புரட்டுகிறேன்'' என்று கூறினார்;.


பிரியமானவர்களே, கர்த்தர் எனக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார், நான் இவ்வளவு
பாடுபட்டும், ஒரு பலனையுமே காணவில்லையே என்று வருத்தத்தோடே இருக்கிறீர்களா? இந்த இடத்திலுள்ள ஆத்துமாக்கள் கல்லை போன்றவர்கள், நான் சுவிசேஷத்தை எத்தனையோ நாடகள் சொல்லியும் எந்தப் பிரயோஜனமுமில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? நான் என் குடும்பத்தின் இரட்சிப்பிற்காக எத்தனையோ நாளாக ஜெபித்துக் கொணடிருக்கிறேன், எத்தனையோ நாளாக அந்தக் கல்லை தள்ளிக் கொண்டே இருக்கிறேன் ஒரு பலனையும் காணவில்லையே என்று திகைத்து நிற்கிறீர்களா? என் மகன் அல்லது மகளின் இரட்சிப்பிறகாக எததனையோ நாளாக அந்தக் கல்லை தள்ளிக் கொணடே இருக்கிறேன், இன்னும் புரட்டவே முடியவில்லை என்று சோர்ந்துப் போயிருக்கிறீர்களா? உங்கள் வேலை தள்ளுவது மட்டுமே! தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருங்கள், தொடர்ந்து கர்த்தருக்காக உங்கள் முழு பெலத்துடன் உழைத்துக் கொண்டே இருங்கள். சோர்ந்துப் போகாதிருங்கள், கர்த்தர் அதன் பலனை காணச் செய்வார். உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு, அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் - (பிரசங்கி 11:1) என்று பிரசங்கியில் நாம் பார்க்கிறோம். கல்லை தள்ள வேண்டியது மாத்திரமே நம்முடைய வேலை, அதை நகர்;த்த வேண்டியது கர்த்தருடைய வேலை. நாம் நம்முடைய வேலையை ஒழுங்காய் செய்தால் கர்த்தர் தம்முடைய வேலையை சரியான நேரத்தில் செய்வார். சோர்ந்து போகாதிருங்கள். சத்துரு வந்து சொல்லும் காரியங்களுக்கு செவிகொடாதிருங்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகாது, நிச்சயமாகவே முடிவு உண்டு. அல்லேலூயா! ஆமென்!


ஜெபம்:
எங்கள் அன்பின் பரம தகப்பனே, நீர் செய்ய சொல்லும் காரியங்களை உண்மையோடும் எங்கள் முழு பெலத்தோடும் செய்ய எங்களுக்கு கிருயை தாரும். இடையில் சோர்ந்து போகாமல் காத்துக் கொள்ளும். எங்கள் வேலை கடினமான பகுதியில் இருந்தாலும், கடினமாக பாதையில், கடினமான வேலையாக இருந்தாலும் உமக்கென்று உத்தமமாய் செய்ய எங்களுக்கு கிருபை செய்யும.; நீரே எங்களுக்காக கல்லை புரட்டித் தள்ளுகிறவர் என்று உம்மீது நாங்கள் சார்ந்து ஜீவிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


anudinamanna@gmail.com

Thursday, January 14, 2010

அனுதின மன்னா ஜனவரி 14

வெற்றியின் நாள்

மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். - நீதிமொழிகள். 11:12.



ஒரு நாள் நான் வெளியே போவதற்காக ஒரு வாடகை டாக்ஸியில் ஏறி அமர்ந்தேன். நாங்கள் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருந்தோம். இடையில் ஒரு கறுப்புநிற கார், திடீரென்று எங்களை நோக்கி வேகமாக வந்தது. எங்கள் டிரைவர் லாவகமாக ஓட்டி, ஒரு சிறு இடைவெளியில் விபத்திலிருந்து தப்ப வைத்தார். மற்ற காரிலிருந்த மனிதனோ எங்கள் டிரைவரை நோக்கி சத்தமிட ஆரம்பித்தான்.

எனக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. ஆனால், எங்கள் டிரைவரோ,புன்னகைத்து விட்டு, கைகளை காட்டிவிட்டு தன்னுடைய பாதையை தொடர்ந்தார். நான் டிரைவரிடம் கேட்டேன், 'ஏன் அந்த ஆளை சும்மா விட்டீர்கள்?' அந்த ஆள்தானே தவறாக வந்தது? நீங்கள ஏன் சத்தம் போடாமல் விட்டீர்கள்? என்று சரமாரியாக கேள்விகள் கேட்டேன். அதற்கு அந்த டிரைவர் சொன்னார், 'அநேக மக்கள் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளைப் போன்றவர்கள். அவர்கள் இருதயம் முழுவதும் நிறைய ஏமாற்றங்கள், நிறைய கோபங்கள், நிறைய விரக்திகள். குப்பை வண்டி ஓரிடத்தில்; அந்த குப்பைகளைக் கொட்டுவதுப் போல் இவர்கள் இந்த குப்பைகளை தங்கள் இருதயத்தில் சுமந்துக கொண்டு யாரிடம் கொட்டுவது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலநேரம் உங்கள் மீது கொட்டுகிறார்கள். அதை எல்லாம் மனதில் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அந்த குப்பைகளை எடுத்து அதை உங்கள் வீடு உங்கள் ஆபீஸ் போன்ற இடங்களுக்குச் சென்று பரப்பக் கூடாது அந்த குப்பைகளை அந்த நேரமே மறந்து விடுவது நல்லது' என்றுக் கூறினார். (அவர் ஒரு கிறிஸ்தவர்) ஆம் அவர் சொன்னது எத்தனை உண்மை! எத்தனை முறை தேவையில்லாமல் நாம் வேலை செய்யும் இடங்களில், நாம் செல்லும் இடங்களில் தேவையற்ற வார்த்தைகளை கேட்டிருக்கிறோம்! எத்தனை முறை அவைகளைக் கேட்டு சோர்ந்துப் போயிருக்கிறோம். நான் ஒருதப்புமே பண்ணலை, ஆனால் என்னை இப்படி சொல்லி விட்டார்களே என்று இரவெல்லாம் தூங்காமல் அதையே யோசித்துக் கொண்டிருக்கிறோம்! அந்த டிரைவர் சொன்னதைப் போல அவர்கள் எல்லாம் குப்பை லாரிகள்! தங்களது குப்பையை யார் மேலோ கொட்ட வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கும்போது நாம் மாட்டியிருப்போம்.

கவலையை விடுங்கள். இது உங்களுக்கு மட்டும் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமல்ல! மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான் என்று வேதம் சொல்கிறது. உங்களது அழகான புதிய நாளை இவைகள் வீணாக்க விடாதீர்கள். யாராவது சத்தமிட்டால், ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டு (மிகவும் கஷ்டம்தான்!)

அப்படியே விட்டுவிடுங்கள். அதையே நினைத்து குமுறிக் கொண்டிருக்காதீர்க்ள்! அவருக்காக ஜெபியுங்கள். உஙகள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால் சண்டை போட்டு நாளை வீணாக்காமல், அவர்ளை நேசியுங்கள்! கர்த்தர் கொடுத்த அருமையான நாளை ஆனந்தமாய் அனுபவியுங்கள்.



ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்

அல்லேலூயா பாடுவோம்!



ஜெபம்:

எல்லா நன்மையான ஊற்றுக்கும் காரணமான எங்கள் நல்ல பிதாவே, இந்த அருமையான காலை வேளைக்காக உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த இந்நாளை வீணாக கோபத்திலும் விரக்தியிலும் செலவழிக்காமல், எஙகளை தூஷிக்கிறவர்களை நாங்கள் நேசிக்க உதவிசெய்யும். இந்த நாளை சந்தோஷமாக கழிக்க உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

Wednesday, January 13, 2010

அனுதின மன்னா ஜனவரி 13

அழியாத கிரியைகள்

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. - வெளிப்படுத்தின விசேஷம். 22:12.


நான் பரலோகத்தில் இருப்பதைக் போல கனவு கண்டேன். அங்கு ஒரு தூதன் ஒரு நோட்டில்
தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். நான் அவன் என்ன எழுதுகிறான் என்றுப் பார்க்க ஆவல் கொண்டேன். அவன் எழுதுகிறது எனக்கு ஆச்சரியமாக இல்லை, ஆனால் அவன் எழுத வைத்திருந்த நித்திய மை (Eternal Ink) என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த மை அந்த பாட்டிலில் இருக்கும்போது கறுப்பாக இருந்தது. ஆனால் எழுத ஆரம்பித்த போதோ தண்ணீரைப் போல நிறமே இல்லாமல் மாறினது. அந்த தூதன் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தான். அவன் எழுதின உடனே அந்த பேப்பரில் இருந்த எழுத்துக்கள் மறைந்து போனது. அந்த தூதன் அதில் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து பக்கம்பக்கமாக எழுதிக் கொண்டே இருந்தான். நான் நினைத்தேன், இந்த தூதன் இப்படி பக்கம் பக்கமாக எழுதி என்ன பயன்? ஓன்றுமே இந்த பக்கங்களிலே இல்லையே! அவன் திரும்ப அதை படிக்க முடியாதே என்று நினைத்தேன்.


எனது ஆச்சரியத்திற்கு, ஒரு பக்கத்தில் ஒருவரியின் எழுத்துக்கள் அப்படியே அழியாமல் நின்றன. அந்தத் தூதனை பார்த்தபோது அவன் முகத்தில் ஒரு திருப்தி நிலவியது. அந்த புத்தகம் முழுவதும் எழுதி முடிக்கும் தருவாயில் ஒரு சில பக்கங்களில் ஒரு சில எழுத்துக்கள் மட்டுமே அழியாமல் அப்படியே இருந்தன. மற்றவை எல்லாம் அழிந்துப் போயின. அப்படி என்னதான் அந்த தூதன் எழுதினான், ஏன் அவனுடைய எழுத்துக்கள் அழிந்து போயின என்பதன் இரகசியத்தை அறிய மிகுந்த ஆவல் கொண்டேன். கடைசியாக அந்தத் தூதனிடமே கேட்டு விடுவது என்று தீர்மானித்து அவனிடம் கேட்டேன். அதற்கு அந்த தூதன் சொன்ன பதில் என்னை திடுக்கிட வைத்தது. அந்த தூதன் என்னைப் பார்த்துச் சொன்னான்: நான் என்ன எழுதுகிறேன் என்று உனக்கு ஆச்சரியமாக இருக்கும்!சர்வ வல்ல தேவன் உலகத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையை குறித்து எழுதச் சொன்னார். இதில் நான் எழுதுகிற ஒவ்வொன்றும் சரியாக அவர்கள் என்னப் பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை
மிகவும் சரியாக எழுதியிருக்கிறேன். நீ என்னிடத்தில் கேட்பதால் நான் இப்போது எழுதிக் கொண்டிருந்தது உன்னுடைய வாழ்க்கையைதான். ஆண்டவர் என்னை உன்னுடைய முழு வாழ்க்கையைக் குறித்தும் எழுதச் சொன்னார். நான் நீ வேலை செய்தபோது பார்த்தேன், நீ ஆலயத்திற்கு போனதைப் பார்த்தேன், நீ ஜெபித்த போது பார்த்தேன், உன்னுடைய கோபங்கள், உன்னுடைய பாவங்கள் உன்னுடைய நன்மையான காரியங்கள், தீமையான காரியங்கள் எல்லம் எழுதப்பட்டன. இப்போது இந்த நித்திய மையைக் குறித்து சொல்கிறேன். நான் எழுதிய இந்த மையில், எந்த காரியங்கள், நீ செய்தவற்றில் நிலையானதோ அது மாத்திரம் நிலைத்திருக்கும், மற்றவை எல்லாம் அழிக்கப்பட்டுப் போகும். உன்னுடைய வாழ்க்கையில் அநேக காலங்கள் அழிக்கப்பட்டு வீணாய் போயிற்று. நான் கர்த்தருக்கு உண்மையாக உன் வாழ்வில் நடந்த எல்லாக் கரியங்களையும் எழுதுகிறேன். இந்த மை எது நித்தியமானதோ அதை மாத்திரம் வைத்துவிட்டு, மற்றதை அழித்து விடும். ஒரு நாள் இந்த புத்தகங்கள் திறக்கப்படும். இந்த நித்திய மையானது, நீ உலகத்தில் செய்த நல்ல காரியங்களை மாத்திரம் வெளிப்டுத்தும். நீ உன் இன்பத்திற்கும் உனக்காகவும் மாத்திரம் வாழ்ந்திருந்தால் அந்த புத்தகத்தின் பக்கங்கள் வெறுமையாக இருக்கும். உண்மையில் சொல்லப் போனால் அந்நாளில் நீ வெட்கத்தினால், முகம் கவிழ்க்கப்பட்டுப் போவாய் கர்த்தருக்கு என்று ஒரு காரியத்தையும் செய்யாமல் போனோமே என்று. நீ பரலோகத்தில் நுழையும் போது இன்னும் அதிகமாக கர்த்தருக்கென்று உழைத்திருக்கலாமே என்று அப்போது நினைத்து,துயரப்படுவாய். உன்னுடைய வாழ்க்கை முழுவதும் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தாலும் நீ கர்த்தருக்கென்று என்ன செய்தாயோ அது மாத்திரம் நிலைத்திருக்கும் என்று அந்தத் தூதன் சொன்னபோது நான் கீழே விழுந்து கண்ணீர் விட்டு அழுதேன். நல்ல வேளை நான் இன்னும் மரிக்கவில்லை, கனவில் தான் இருந்தேன். நான் அந்தத் தூதனிடம், 'நீர் போய் கர்த்தரிடம் சொலலும், நான் எழுந்தரிக்கும்போது நான் என்னை முற்றிலுமாக கர்த்தரிடம் ஒப்புவித்து அவருக்காக நான் வாழ்வேன். நான் பாவ வழியில் இருந்து விலகி பரிசுத்தமாக வாழ்ந்து, என்னால் இயன்ற வரை ஆத்துமாக்களை கர்த்தரிடம் கொண்டு வருவேன். இந்த அழிந்துப் போகிற உலகத்தையே நோக்கமாக கொண்டு வாழாமல், இந்கு காணப்படும் சுகங்களையே நித்தியமாக எண்ணாமல், கர்த்தருக்கு உண்மையாக வாழ்வேன். என் புத்தகத்தை அந்நாளில் கர்த்தர் திறக்கும்போது அவை வெறும் பக்கங்களாக இல்லாமல், அவற்றை நிரப்பத்தக்கதாக என் வாழ்க்கையை நான் வாழ்வேன். நல்லது உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று கர்த்தர் என்னை அழைக்கும்படி நடந்துக் கொள்வேன்' என்று கர்த்தரிடம் சொல்லுங்கள்' என்றுக்
கூறினேன். (The actual account of a dream- by Craig F. Pitts)


அன்பானவர்களே, நம்மில் எத்தனைப் பேர் நித்தியத்தைக் குறித்த நினைவே இல்லாமல், இந்த உலகத்திற்காகவே வாழ்ந்;துக் கொண்டிருக்கிறோம்! ஜீவ புஸ்தகம் என்று உண்டு நாம் செய்தவை எல்லாம் எழுதப்பட்டிருக்கும் என்ற நினைவே இல்லாமல் பணத்தை சம்பாதிப்பதும் சொத்துக்களை சேர்ப்பதும், கர்த்தருடைய காரியங்ளை செய்வதற்கு வேறு யாரோ இருக்கிறார்கள், நான் எனக்காக, என் குடும்பத்திறகாக வாழ்நதால் போதும் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்களா? தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். - (லூக்கா 12:20).பூமிக்குரியவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுவோம் தேடுவோம். கர்த்தர் நம்முடைய புத்தகத்தை திறக்கும் அந்நாளில், வெறும் பக்கங்களாக இல்லாமல், அவைகள் முழுவதும் நிரம்பத்தக்கதாக கர்த்தருக்கென்று உழைப்போம் ஆமென் அல்லேலூயா!


ஜீவனுள்ள நாட்களெல்லம்

இயேசுவுக்காய் வாழ்வோம்

இருப்பதுவோ ஒரு வாழ்வு

அதை அவருக்கு கொடுத்திடுவோம்.



ஜெபம்:
எங்களை வழிநடத்துகிற எங்கள் நல்ல தெய்வமே, உம்மை நாங்கள் ஸ்தோததரிக்கிறோம். எங்களது வாழ்நாள் முழுவதும் ஒரு புல்லைப் போல கடந்து போகிறது ஆண்டவரே. அந்த வாழ்நாளில் நாங்கள் உமக்கென்று உண்மையாய உழைக்க, உமக்கென்று வாழ உதவி செய்யும். ஜீவ புஸ்தகத்தில் வெறும் பக்கங்களாக எங்கள் வாழ்நாட்கள் காணப்படாமல், அவைகளை நிரப்பத்தக்கதான வாழ்க்கையை நாங்கள் வாழ எங்களுக்கு கிருபை செய்யும். எங்களை எடுத்துப் பயன்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

Tuesday, January 12, 2010

அனுதின மன்னா ஜனவரி 12

நமது வெற்றிக் கொடி

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். – ஏசாயா. 40:31.

ஒரு உற்சாகமான வாலிபன் இல்லினோயிஸின் (Illinois) சட்டசபை தேர்தலில் நின்று வெகு சொற்ப ஓடடுகளை எடுத்து படுதோல்வியடைந்தான். மனம் சோர்வடையாமல், தன் கவனத்தை வியாபாரத்தில் செலுத்தினான். ஆனால் அவனுடன்கூட இருந்து வியாபாரம் செய்தவன் அவனை ஏமாற்றியபடியால் பணமெல்லாம் செலவாகி, கடனை வாங்கி, அவற்றை செலுத்தி முடிக்க 15 நீண்ட வருடங்கள் ஆனது.


பின் அவர் வாழ்வில் வந்த ஒரு அழகிய பெண் வசந்தத்தைக் கொண்டு வருவாள் என்று எதிர்ப்பார்த்தார். அவளை திருமணம் செய்ய முடிவெடுத்தபோது அவளுக்கு மலேரியா காய்ச்சல் வந்து அவள் மரித்துப் போனாள். கடைசியாக, திரும்பவும் அரசியலில் நுழைந்து, மாநில அளவில் அவர் நின்று ஜெயித்தபடியால், அவருக்கு தேசிய அளவில் நிற்க வேண்டும் என்று தோன்றிற்று. ஆனால் அதுவோ அவருக்கு எட்டாதக் கனியாகத் தோன்றிற்று. ஆனால் இரண்டாவது முறையாக அவர் அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் நின்று ஜெயித்தார். ஆனால் அவருக்கு போதிய அளவு அவையில் ஆதரவு இல்லாததால், இரண்டு வருடங்கள் கழித்து, வாஷிங்டனை விட்டே வெளியே செல்ல நேரிட்டது.


இத்தனை நடந்தும் அவர் மனம் சோர்ந்துப் போகவே இல்லை. திரும்பவும், அமெரிக்க பாராளுமன்றத்துக்கு ஒரு உறுப்பினராக போட்டியிட்டார். தோற்றுப் போனார். இரண்டாவது முறையாக நின்றும் தோற்றுப் போனார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஒரு நாள் தான் எப்படியும் வெற்றிப் பெறுவோம் என்று நம்பிக்கையோடு விடாது முயற்சி செய்தார். அவரது முயற்சி வீண் போகவில்லை. இறுதியாக வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் ஜனாதியதியாக நுழைந்தார். அவர் தான் கறுப்பர்களின் விடுதலைக்காக போராடிய அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) ஆவார்.



அவர் ஒரு சிறந்த கிறிஸ்தவராக இருந்தபடியால் ஒரு சிறந்த ஜனாதிபதியாக இன்று வரைப் போற்றப்படுகிறார். ஆம் பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வியா? மனம் சோர்ந்துப் போகாதீர்கள். என்ன வாழ்க்கை என்று கசந்துக் கொள்ளாதிருங்கள். விடா முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற்று இப்போது புகழ் பெற்று விளங்குகிறவர்கள் யாருக்கும் வெற்றி உடனே வந்து விடவில்லை, அவர்களுடைய விடா முயற்சியும், கர்த்தர் மேல் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையுமே அவர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்,அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் ஏசாயா 40:31 என்று வசனம் கூறுகிறது.கர்த்தர் எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். நாம் அவரை உறுதியாய் பற்றிக் கொண்டிருப்போமானால், தோல்வியைக் கண்டு துவள மாட்டோம். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்று சங்கீதம் 37:5ல் வாசிக்கிறோம்.
நமது தேவன் யெகோவா நிசி, நம் ஜெயக் கொடியானவர். நமக்கு ஜெயத்தை தராமல் யாருக்கு ஜெயத்தை தரப் போகிறார்? கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கும்போது நாம் தோல்வியைக் கண்டு கலங்கத் தேவையில்லை. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் ரோமர் 8:28. ஆகையால் மனம் கலங்காதீர்கள். அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது. யெகோவாநிசியையே நோக்கிப் பார்ப்போம் வெற்றி நமக்குத்தான். அல்லேலூயா!


யெகோவாநிசி யெகோவாநிசி

எங்கள் கொடி வெற்றிக் கொடியே!



ஜெபம்:
எங்கள் வெற்றிக் கொடியாகிய யெகோவாநிசியே, எங்களுக்கு வெற்றியை எப்போதும் தருகிறவரே, உம்மைத் துதிக்கிறோம். தோல்வியைக் கண்டு நாங்கள் சோர்ந்துப் போகாமல், உம்மையேப் பற்றிக் கொண்டு வெற்றியை சுதந்தரிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள
நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail

Monday, January 11, 2010

அனுதின மன்னா ஜனவரி 11

அவர் காத்திருக்கிறார்

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். - 1 பேதுரு.4:7.


அந்த ஹோட்டலில் இரண்டாவது முறையாக சர்வர் அந்த மனிதரிடம் வந்து ‘ஐயா ஏதாவது வேண்டுமா?’ என்றுக் கேட்டான். அவர் வந்து அரை மணி நேரம் ஆகிறது. அவரோ, ‘இல்லை இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கிறேன். அவள் வந்து விடுவாள்’ என்றார்.


அந்த மனிதர் பார்க்க அழகாக நல்ல உடை உடுத்தி இருந்தார். யாரையும் ஈர்த்திழுக்கும் தோற்றம். அவளுக்காக அவர் காத்திருந்தார்; தனிமையாக அமர்ந்திருந்து பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னும் அரை மணிநேரம் கழித்து, சர்வர் திரும்பவும் வந்து, ‘ஐயா காப்பியாவது கொண்டு வரட்டுமா?’ என்றுக் கேட்டான். அவரும் ‘சரி’ என்றார். அவன் காபி கொண்டுவந்து கொடுத்து விட்டு, ‘ஐயா உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் ஒன்று கேட்கட்டுமா?’ என்றுக் கேட்டான். அதற்கு அவர் கேள் என்றார். ‘ஐயா நீங்கள் இன்று 3 ஆவது நாளாக அந்தப் பெண்ணிற்காக காத்திருக்கிறீர்கள். அவளோ வரவேயில்லையே, ஏன் அவளுக்காக காத்திருக்க வேண்டும்? நீங்கள் மற்ற வேலைகளை கவனிக்கலாமே’ என்றான். அதற்கு அவர்‘அவள் சொன்னாள் நான் வருவேன் என்று, அதோடு அவளுக்கு நான் தேவை’ என்றார். ‘ஐயா அவளுக்கு நீங்கள் தேவை என்றால் இன்று மூன்றாவது நாளாக உங்களை காக்க வைக்கமாட்டாளே’ என்றான். ‘அவள் சொன்னாள், தான் இன்று வருவதாக நான் அவளை அதிகமாய் நேசிப்பதால் அவளுக்காக காத்திருக்கிறேன்’ என்றார். அந்த சர்வர், இந்த மனிதனுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்திருக்குமா? என்று யோசித்துப் பார்த்து, இல்லை ஆளைப் பார்த்தால் நன்றாக இருக்கிறார், என்னவோ நமக்கு என்ன என்று போய் மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான். நேரம் கடந்துக் கொண்டே இருந்தது. அவளோ வரவேயில்லை. அவளது சத்தத்தைக் கேட்க வேண்டும், அவளோடு எத்தனையோ காரியங்களை பகிர்ந்துக கொள்ள வேண்டும் என்று அவர் பொறுமையோடு காததிருந்தார். ஹோட்டலை மூடும் நேரம் வந்தபோது அந்த சர்வர் மீண்டும் வந்து, ‘ஐயா உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? என்றுக் கேட்டான்.’ அதற்கு அவர், ‘இன்று அவ்வளவுதான், நான் புறப்படுகிறேன்’ என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு, கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு, புறப்படும்போது அங்கு இருந்த கிளர்க்கிடம், நாளை சரியாக 6 மணிக்கு இரண்டு பேருக்கு டேபிளை புக் பண்ணி விடுங்கள் என்றுச் சொல்லி விட்டு தனது ஏமாற்றத்தை மறைக்க மெல்லியதாக புன்னகைத்து விட்டுச் சென்றார்.


அவர் வெளியே போகும்போது யாருக்காக அவர் அத்தனை நேரம் காத்திருந்தாரோ, அவள் தனது படுக்கைக்கு சென்றாள். அன்று சாயங்காலம் முழுவதும் தன் தோழிகளோடு வெளியே சென்றிருந்ததால் அவளுக்கு ஒரே களைப்பு. அடுத்த நாள் அலாரம் வைக்க தனது கடிகாரத்தை பார்த்தபோது அதன் கீழ் ஒரு தாளில் இன்று ஆறு மணிக்கு ஜெபிக்க வருவதாக எழுதி வைத்திருந்தாள். ஐயோ மறந்துப் போய்விட்டோமே! என்ற ஒரு சிறிய வருத்தம் மனதில் தோன்றியது. அதை புறம்பே தள்ளிவிட்டு நாளை பார்த்துக் கொள்ளலாம், இயேசுகிறிஸ்து மன்னித்து விடுவார் என்று எண்ணியபடி படுக்கச் சென்று விட்டாள்.


இன்று நம்மில் அநேகர் ‘அப்பா எனக்கு இதைச் செயயும், நான் தினமும் ஜெபிப்பேன்’ என்று வாக்கு பண்ணுகிறோம் ஆனால் காரியம் நடந்த பிறகு அதை மறந்துப் போகிறோம். கர்த்தர் மன்னித்து விடுவார் என்கிற குருட்டு நம்பிக்கை. ஆனால் அவர் காத்திருக்கிறார் என்பதை மறந்து போய் விடுகிறோம். இன்று எத்தனை குடும்பங்களில் குடும்ப ஜெபம் வைப்பதில்லை. தேவனிடம் நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு குடும்பமாக ஒரு நன்றி தெரிவிக்கக்கூட நாம் ஜெபிப்பதில்லை.குடும்ப ஜெபம் இல்லாத வீடு, கூரை இல்லாத வீடு என்று என் பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள். கூரை இல்லாத வீடு எல்லா மழைக்கும் காற்றுக்கும் தூசிக்கும் திறந்திருக்கிற மாதிரி எல்லா கஷ்டங்களுக்கும் பிசாசின் கிரியைகளுக்கும் திறந்துக் கொடுக்கிற மாதிரியாகும். அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்;அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று என்று கர்த்தரிடம் முறையிட்டான். அப்படியானால் நம் குடும்பத்தைச் சுற்றி நம் ஜெபத்தினால் வேலி அடைக்கிறோம். அது எத்தனை பாதுகாப்பு! தனி ஜெபத்தினால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஜெயம் உண்டாகும். நாம் தசமபாகம் கொடுக்கும்போது நேரத்திலும் தசமபாகம் கொடுக்கப்பட வேண்டும் அப்படியானால் ஒரு நாளில் 2 மணி 40 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும், நாமோ ஐந்து நிமிடங்கள் வேகமாக ஜெபித்து விட்டு போகிறோம். ஜெபத்திறகு நேரத்தை ஒதுக்குவோம். ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம். ஆமென்.


ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா

ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்

ஜீவியத்திற்கு இதுவே சட்டம்



ஜெபம்:
எங்களை நேசிக்கிற நல்ல பிதாவே, ஜெபிக்கிற வாஞ்சையை தாரும் ஐயா. ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேனமையை காணச் செய்யும். சோர்ந்து போகாமல் ஜெபிக்க கிருபைச் செய்யும். ஜெபத்தினால் கிடைக்கும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள உதவிச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail

Sunday, January 10, 2010

அனுதின மன்னா ஜனவரி 10

தகப்பனின் வாக்கு

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். – யோவான் - 16:33.


1989-ம் ஆண்டு ஆர்மேனியா (ஆழ்ம்ங்ய்ண்ஹ) தேசத்தில் நடந்த நான்கு நிமிடத்திற்கும் குறைவான பூமி அதிர்ச்சியில் (ரிட்சர் ஸ்கேலில் 8.2) – (தண்ஸ்ரீட்ற்ங்ழ் ள்ஸ்ரீஹப்ங்) ஏறக்குறைய 30,000 மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது அங்கு இருந்த நிலைமையை சற்று சிந்தித்துப் பார்த்தால் தெரியும், எவ்வளவு பரிதாபமான நிலைமை என்று. எங்கு பார்த்தாலும் ஓலங்களும், தங்களுக்குரியவர்களை இழக்க கொடுத்த துயரத்தில் அழுகைகளும், உயிரோடு இருப்பவர்களை தேடிக் கொண்டிருந்த உறவினர்களும் என்று ஒரே துயரமான சூழ்நிலை. அதில் ஒரு தகப்பன் தன் மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளியை நோக்கி விரைந்தார். அங்கு பள்ளிக்கு பதிலாக அந்த இடத்தில் இடிபாடுகளோடுகூட கல்லும் மண்ணும் குவியலாக இருந்தது. அதைப் பார்த்த தகப்பனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மற்ற பெற்றோர் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியபடி தங்களது பிள்ளைகளின் பெயர்களை கூப்பிட்டுக் கொண்டே தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தத் தகப்பனோ தனது மகன் படித்துக் கொண்டிருந்த வகுப்பு இருந்த இடத்தை தேடி கண்டுபிடித்து, அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தார். அவர் தன் மகனிடம் சொல்லியிருந்தார், தான் எப்போதும் தன் மகனுடன் இருப்பேன் என்றும் அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றும் வாக்கு பண்ணியிருந்தார்.


அவர் தோண்ட ஆரம்பித்தபோது, மற்ற பெற்றோர், ‘கால தாமதமாகிவிட்டது, எல்லாரும் மரித்து விட்டனர், இனி ஒரு பிரயோஜனமில்லை’ என்றுக் கூறி அவரை தடுத்தனர். அவரோ விடாமல் தோண்ட ஆரம்பித்தார். தீயணைப்பு படையினர் வந்து ‘எங்கும் தீ பற்றி எரிந்து, வெடிக்கிறது, நீங்கள் எது செய்தும் பிரயோஜனமில்லை வீட்டுக்கு போய் விடுங்கள்’ என்று கூறி அவரை எச்சரித்தனர். அவரோ விடாப்பிடியாக தோண்டிக் கொண்டே இருந்தார். கடைசியாக போலீஸ் படையினர் வந்து ‘உங்கள் வேதனை எங்களுக்குப் புரிகிறது. இப்போது எந்தப் பயனும் இல்லை, போய் விடுங்கள்’ என்று அவரை அந்த இடத்திலிருந்து இழுத்தனர். அவரோ தன் மகன் மேல் கொண்டிருந்த அன்பினால் தொடர்ந்து தோண்டிக் கொண்டே இருந்தார். 8மணி நேரம்.. 12.. 24.. 34 மணிநேரம் தொடர்ந்து ஓயாமல் தோண்டிக் கொண்டே இருந்தார். 38ஆவது மணி நேரத்தில் அவரது மகன் உதவிக்கு அழைக்கும் அழுகுரல் அவருக்கு கேட்டது. உடனே ‘ஆர்மண்ட்’ (ஆழ்ம்ர்ய்க்) என்று உரத்த சத்தமாக கூப்பிட்டு பார்த்தார். உடனே மகன், ‘அப்பா நீங்களா! எனக்குத் தெரியும் என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன், என் தகப்பன் உயிரோடு இருந்தால் என்னைக் காப்பாற்ற எப்படியும் வருவார் என்று, என் நம்பிக்கை வீண் போகவில்லை’ என்று மிகுந்த சந்தோஷத்துடன்
இடிபாடுகளின் மத்தியிலிருந்து பத்திரமாக தன் நண்பர்களுடன் மீட்டெடுக்கப்பட்டான்.


ஒரு உலகப்பிரகாரமான தகப்பன் தன் மகனுக்கு கொடுத்த வாக்குக்காக போராடி தன் மகனை
மீட்டெடுக்க முடியுமென்றால் நம் பரம தகப்பன் நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார், உலகத்தின் முடிவு பரியந்தம் நான உங்களுடனேட இருக்கிறேன் என்று. அவர் வாக்கு மாறாதவர். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் கல்லும் மண்ணும் எது? கடன் என்னும் கல்லா? பாவகட்டுகள் என்னும் கல்லா? குற்ற உணர்ச்சி என்னும் கல்லா? பிரச்சனைகள் என்னும் கல்லா மண்ணா? எந்தக்கல்லையும் புரட்டித் தள்ளி விடுவிக்க தேவன் வல்லவராகவே இருக்கிறார். 2000 வருடங்களுக்கு முன்பு இயேசுகிறிஸ்துவின் கல்லறையை மூடியிருந்த கல்லை புரட்டித் தள்ளி, அவரை உயிரோடு எழுப்பின தேவன் இன்றும் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் கற்களை மாற்றி உங்களை விடுவிக்கவும், தமது
வாக்குதத்தங்களை நிறைவேற்றவும் அவர் வல்லவராகவே இருக்கிறார். அவரது வாக்குதத்தங்களை பற்றிக் கொண்டு அதை உரிமைக் கொளவோம். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான், தேடுகிறவன் கண்டடைகிறா தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். நமது பிரச்சனைகளாகிய கற்களிலிருந்து விடுபட்டு வெளியே விடுதலையோடு வருவோம். ஆமென் அல்லேலூயா!


மலைகள் பெயர்ந்து போகலாம்

குன்றுகள் அசைந்து போகலாம்

கன்மலையாம் கிறிஸ்து

கைவிடவே மாட்டார்.



ஜெபம்:
எங்களை நேசிக்கிற எங்கள் அன்பின் பரம தகப்பனே, வேதத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு வாக்குதத்தங்களுக்காகவும் ஸ்தோத்திரம். அவைகளை உரிமை பாராட்டி எங்கள் வாழ்க்கையில் வெற்றிக் கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். உலகத்தின் முடிவு பரியந்தம் எங்களோடு இருப்பவரே உம்மையே நாங்கள் துதிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail

Saturday, January 9, 2010

வாடகை மனைவி ????

சில‌ தின‌ங்க‌ளுக்கு முன்பு, ந‌ண்ப‌ர் ஒருவ‌ரின் இணைய‌த்த‌ள‌தில் ஒரு க‌ட்டுரை ப‌டித்தேன்,
நெஞ்ஞை பதற வைத்த‌ அதை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ன்து கொள்கிறேன்,

வாடகை மனைவி! தமிழகத்தில் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரம்.




திருச்சி, உறையூரில் குறுக லான தெருவில் இருக்கிறது, அந்த பழங்காலத்து வீடு..!

துருப்பிடித்த இரும்பு கிரில் கதவு... திறக்கும்போதே கிறீச்சிடுகிறது. அதைக் கேட்டதுமே உள் வாசல் கதவு மெதுவாய் திறக்கிறது.

ஏற்கெனவே சொல்லி வைத்திருந் ததால் அதிகம் அறிமுகப் பேச்சு இல்லை!

''வாங்க, வணக்கம்!'' என நம்மையும், நம்மை கூட்டிச் சென்ற தொழிலதிபரையும் கைகூப்பி வரவேற்கிறார், அந்தக் குடும்பத் தலைவி. வீட்டுக்குள் நுழைந்த சில மைக்ரோ செகண்டுகளில் நம் கண்கள் உள்ளே அளவெடுக்கின்றன.

எப்போதோ அடித்த டிஸ்டம்பர் பெயின்ட் பாதிக்குமேல் உதிர்ந்து வெளிறிய சுவர்கள்... ஒரு ஹால், இரண்டு படுக்கையறை, சமையலறை..! ஹாலில் நான்கு ஃபைபர் சேர்கள் கிடக்க, புத்தம் புது எல்.ஜி. டி.வி--யில் ஏதோ பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

டி.வி.டி. பிளேயர், ஃபிரிஜ், வாஷிங் மெஷின் என்று மேல்நடுத்தர வர்க்கத்துக்கான வசதிகளைக் கொண் டிருந்தாலும், அது ஒரு வாடகை வீடு என்பதை முன்கூட்டியே நாம் அறிந்திருக்கிறோம். 'வீடு மட்டு மல்ல... நம்மை வரவேற்கும் அந்தக் குடும்பத் தலைவியே ஒரு வாடகை மனைவிதான்...' எனும்போது வாசகர்களுக்கு எப்படி தீயை மிதித்தாற்போல் இருக்கும் என்று புரிகிறது. விவகாரத்தை முதலில் கேள்விப்பட்டபோது அதே உணர்வு தான் நமக்கும்.

'மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறுவதாக நாம் இதுவரை கேள்விப்பட்டிருந்த அதே விபரீத கலாசாரம், தமிழ்நாட்டுக் குள் காலடி வைத்துவிட்டது' என்று கோவிந்தன் சொன்னபோது, முதலில் நாம் நம்பவில்லை. ஆனால், துளிகூட ஜீரணிக்க முடியாவிட்டாலும் உண்மை அதுதான்!

''ஒரு மாதம், இரண்டு மாதம் என்று தொழில் நிமித்தமாக ஊர் மாறி, மாநிலம் மாறி தமிழகம் வரும் பல தொழிலதிபர்களுக்கு 'விழிப்பு உணர்வு' கூடிப் போயிருக்கிறது. ஹெச்.ஐ.வி-க்கு இரையாவதற்கோ, தினம் தினம் ஒரு பெண்ணைத் தேடிப் போய்க் கொண்டிருக்கவோ அவர்களில் பலருக்கு இஷ்டமில்லை. அதுவும் தவிர, அழகான ஒரு குடும்பத்துக்குத் தலைவியா இருக்கிற பெண்களை - கௌரவமான ஒரு உத்தியோகம் பார்க்கிற நடுத்தர வயது இல்லத்தரசிகளை - மொத்தமாக சில நாட்கள் தங்களுக்கே தங்களுக்கு என்று வைத்துக் கொள்வதில் அவர்களுக்குத் தனியாக ஒரு கிக் இருக்கிறது. பேசிய அமவுன்ட்டை கொடுத்துவிடுகிறார்கள். இவர்களைச் 'சேர்த்து'விடுபவர்களையும் 'புரோக் கர்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது...'' என்று கோவிந்தன் கொடுத்த அறிமுகத் திலேயே, நம் தலை தட்டா மாலை சுற்றியது.



கோவிந்தன்..?


திருச்சியில் 'லைட் டிரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இவர்.

''மலைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைத் திட்டங்களில் ஈடுபடுவதுதான் எனது டிரஸ்டின் வேலை. இதற்காக வேலூர் மலைப் பகுதிகளில், சத்தியமங்கலம் மலைப் பகுதிகளில் என தமிழகத்தின் பல்வேறு மலைப்பிரதேசங்களிலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி களுக்கு அடிக்கடி சென்று வருவது என் வழக்கம். அப்படி ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு சென்றபோதுதான் 'வாடகை மனைவி' என்ற பயங்கரத்தை முதலில் கேள்விப்பட்டேன். கணவர், குழந்தைகள், மற்றும் புகுந்த வீட்டுச் சொந்தங்களுடன் ஒரு சராசரி இல்லத்தரசியாகவே வாழும் சில பெண்கள், மாதக் கணக்கில் வேறொருவருக்கு மனைவி யாகப் போய் வாழ்ந்துவிட்டு, கான்ட்ராக்ட்(?) காலம் முடிந்தவுடன் பழையபடி தங்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்து, வழக்கமான குடும்ப வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்பதை சாட்சிகளுடன் உறுதி செய்துகொண்டபோது, கிட்டத்தட்ட நடுங்கிப் போய்விட்டேன்!

இந்த பயங்கரத்தின் அடி ஆழம் வரைக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் எனது டிரஸ்ட் ஊழியர்கள் சிலருடன் களத்தில் இறங்கினேன். முதலில் காஞ்சிபுரத்தில் ஒரு புரோக்கரின் உதவியுடன் ஒரு வாடகை மனைவியை சந்தித்தோம். அந்தப் பெண்

காஞ்சிபுரம் பக்கமுள்ள ஒரு டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் லெக்சரராக இருந்தார். புரோக்கர், அந்தப் பெண்ணின் வீட்டுக்கே நேரடியாக என்னை அழைத்துச் சென்றார். குடும்பப்பாங்கான அழகும், அடக்கமும், லேசான மிரட்சியும் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே போய், அவருடைய புகுந்த வீட்டு சொந்தங்களுக்கு மத்தியில் 'கான்ட் ராக்ட்'டுக்குப் பேச முடிந்தது.

வறுமைக்காக வழி தவறிப் போகிற பெண்களை நாம் பார்த் திருக்கிறோம். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டு சூழலைப் பார்த்தபோது, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை நடத்துவதற்கு அங்கே எந்தக் குறையும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. என்னை அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு புரோக்கர் கிளம்பி விட்டார். காபி கொண்டுவந்து கொடுத்தவர், எடுத்த எடுப்பிலேயே 'என்னைப் பிடிச்சிருக்கா?' என்று ஏதோ பெண் பார்க்க வந்தவரிடம் கேட்பதுபோல் விசாரிக்கவும்... தூக்கி வாரிப் போட்டது. மேற்கொண்டு பேசப் பேசத்தான் இந்த பகீர் கலாசாரத்தின் நெட்வொர்க் தமிழ் நாட்டில் எந்தளவுக்கு விரியத் தொடங்கியுள்ளது என்று புரிந்தது...'' -சொல்லி நிறுத்திய கோவிந்தன்...

''அதையெல்லாம் உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு முன், ஒரு கான்ட்ராக்ட் எப்படி முடிவாகிறது என்பதை நீங்களே கண்ணால் பார்த்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் இதன் முழுப் பரிமா ணத்தைப் புரிந்துகொள்ள முடியும்!'' என்று, சில ஏற்பாடுகள் செய்து நம்மை அனுப்பி வைத்தார்.

வாடகை மனைவிக்கான 'தேடலு டன்' திருச்சிக்கு வந்திருந்த ஒரு சென்னைத் தொழிலதிபருடன் ஏதோ 'மாப்பிள்ளைத் தோழன்' ரேஞ்சுக்கு நம்மையும் கோத்துவிட்டார் அவர். நம் வசம் உள்ள ரகசிய கேமராவில், ஒவ்வொரு நொடியும் காட்சிகளோடு சேர்ந்து பதிவாகிறது என்பது தொழில திபருக்குத் தெரியாது. முப்பது வயது மதிக்கத்தக்க அந்த குடும்பத் தலை வியும் அதை அறியார்!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரத்தின் சாட்சியாக அந்த வீட்டுக்குள் நடப் பதை வாசகர்கள் நம்மோடு சேர்ந்து அமைதியாகக் கவனிக்கவும். இன்னும் அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன், பின்னணிகளை பிறகு பார்ப்போம் -

குடும்பத் தலைவி: (மெல்லிய குரலில்) வாங்க....உக்காருங்க....

தொழில் அதிபர்: வணக்கங்க!

குடும்பத் தலைவி: தண்ணீ குடிக்கிறீங் களா?

தொழில் அதிபர்: ம்....குடுங்க...

கு.த: இந்தாங்க.... (சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து தருகிறார்).

தொ.அ: தாங்க்ஸ்ங்க... நீங்களும் உக்கா ருங்க!

கு.த: இப்பதான் வர்றீங்களா?

தொ.அ: ஆமாம்... (ஒரு பெயரைச் சொல்லி) உள்ள வரமாட்டேன் னுட்டார். வாசல்லயே அப்படியே கிளம்பிட்டார்.

கு.த: ஆமாம்.... எப்பவுமே அவரு போயிடுவாரு....

தொ.அ: சொந்த வீடா இது...

கு.த: இல்லீங்க, வாடகை வீடு.

தொ.அ: உங்க பேருங்க..?

கு.த: (பெயரைச் சொல்கிறார்).

தொ.அ: நான் யாருன்னு சொன் னாரா?

கு.த: ம்....ஒண்ணும் சொல்லலை.

தொ.அ: என் பேரு ...... (சொல்கிறார்!). நான் சென்னை. மெடிக்கல் லைனுல இருக்கறேன். அடிக்கடி திருச்சி வருவேன்.

கு.த: ஓ, அப்படியா...

தொ.அ: மேரேஜ் ஆயிடுச்சா, உங்களுக்கு?

கு.த: ம்....ஆயிருச்சு.

தொ.அ: அப்படியா, ஹஸ்பெண்ட் என்ன பண்றாங்க?

கு.த: ஒரு பிரைவேட் கம்பெனியில ஒர்க் பண்றாங்க.

தொ.அ: என்னவா..?

கு.த: சும்மா... கம்பெனியில ஒர்க் பண்றார்...

தொ.அ: சரி, சரி.. குழந்தைங்க இருக் குதா..?

கு.த: ஒரு பையன்... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான்.

தொ.அ: எத்தனை வருஷம் ஆச்சு கல்யாணமாகி?

கு.த: ஏழு, எட்டு வருஷம் ஆச்சு

தொ.அ: அவரு உங்களோட சொந்தக்கார பையனா?

கு.த: ஆமாம்...

தொ.அ: நீங்க வேற எங்கயும் ஒர்க் பண்றீங்களா?

கு.த: இல்லீங்க... நான் ஹவுஸ் ஒய்ஃப்தான்.

தொ.அ: வீட்டுலதான் இருக்கீங்க.... ம்... என்ன படிச்சிருக்கீங்க?

கு.த: (சின்ன தயக்கத்துடன்) டுவெல்த் வரைக்குந்தான்....

தொ.அ: ஏன்.... டிகிரி போக லையா?

கு.த: ம்ஹ§ம்... படிக்கலை!

தொ.அ: ............தான் சொன்னாரு, எனக்கு எல்லா மேட்டரும்...

கு.த: ம்ம்ம்ம்...

தொ.அ: நான் எப்ப திருச்சி வந்தா லும் எங்கயாவது போறதுண்டு! அதான் அவர்கிட்ட(?)கேட்டேன். அவர் சொன்னாரு... இந்த மாதிரி இருக்காங்கன்னு! உங்களுக்கும் ஒண்ணும் பிரச்னை இருக்கா துன்னு சொன்னார்! அதான் பார்க் கலாம்ன்னு வந்தேன். ஆல்ரெடி நாலஞ்சு டைம் அவரு ஆபீஸுக்கு நீங்க வந்துருக்கீங்க. அப்ப நான் அறிமுகப்படுத்திக்கலை. பேசலை... ஆனா உங்களைப் பார்த்திருக்கேன்.

கு.த: ஓ... அங்கேயே பார்த் திருக்கீங்களா..!

தொ.அ: ஆமாங்க. நீங்க எவ்ளோ வாங்கறீங்க?

கு.த: 25,000 ரூபாய்.

தொ.அ: மாசத்துக்கு தானே?

கு.த: ம்.. மாசத்துக்குதான்.

தொ.அ: ஓ.. நான் இப்ப 25,000 ரூபாய் குடுத்துட்டா, நான் சொல்ற அந்த ஒன்மன்த்துக்கு வேற எங்கயும் போக மாட்டீங்க தானே...?

கு.த: வேற எங்கயும் போக மாட்டேன்.

தொ.அ: எப்படிங்க.... நான் வீட்டுக்கு வரணுமா? இல்லாட்டி நீங்க வெளியே வருவீங்களா?

கு.த: வெளியவும் வருவேன். நீங்க வீட்டுக்கும் வரலாம். ஒண்ணும் பிரச் னையில்லை.

தொ.அ: வீட்டுக்குன்னா? வீட்டுல குழந்தை..?

கு.த: என்னைப் பொறுத்தவரைக்கும் குழந்தை இல்லாத நேரத்துலதான் வரமுடியும். ஏன்னா, பையன் ஸ்கூலுக்கு போயிடுவான். எயிட் டு ஃபோர் ஓ கிளாக் அவன் போயிடு வான். டியூஷனுக்கும் இடையில போயிடுவான். 4 மணிக்கு மேல, அந்த நேரத்துல ஆள் இல்லாத நேரத்துலயும் நீங்க வந்து போய்க்கலாம்.

தொ.அ: (நீண்ட மௌனத்துக்குப் பிறகு) ஓ!

கு.த: குழந்தை இல்லாத நேரம் போக, மத்தபடி வீட்டுக்காரர் இருக் கறப்பகூட வரலாம்.

தொ.அ: அப்படியா... வரலாமா? அவருக்குத் தெரியுமாங்க எல்லாம்?

கு.த: அவருக்குத் தெரி யுங்க.

தொ.அ: அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரா?

கு.த: எல்லாம் அவருக்குத் தெரியும். ஒண்ணும் சொல்ல மாட்டாரு.

தொ.அ: என்னங்க சொல்றீங்க..? பிரச்னை எதுவும் வந்துறாதா? நான் இங்க இருக்கற நேரம் அவரு வந்து ஏதாவது ரசாபாசம் ஆகிடப் போகுது...

கு.த: இல்லை... இல்லை... அந்த ஒரு மாசத்துக்கு நீங்க 'பே' பண்ணிடறீங்க, இல்லையா...

தொ.அ: இந்த மாசத்துல ஆல்ரெடி யாரும் இருக்காங்களா?

கு.த: ம்.... இருக்காங்க.

தொ.அ: யாருன்னு தெரிஞ்சுக்க லாமா?

கு.த: அவரும் ஒரு கம்பெனி ஓனர்.

தொ.அ: திருச்சியா அல்லது வெளி யூரா?

கு.த: உள்ளூர்க்காரங்க எப்படி? வெளியூர்தாங்க.

தொ.அ: ஓஹோ... நான் வர்றப்பலாம் ஊட்டி, கொடைக்கானல்னு வேற ஊர்களுக்கும் போறதுண்டு. அங்கெல் லாம்கூட வருவீங்களா....?

கு.த: போலாங்க. எங்க ஃபேமிலியைப் பொறுத்தவரைக்கும் சனி, ஞாயிறு மட்டும்தான் வெளியூர் வருவேன். அந்த சமயத்துல பையனை வீட்டுக் காரர் பார்த்துப்பாரு...

தொ.அ: அப்படியே பண்ணிக்கலாம். ஒண்ணும் பிரச்னையில்லை. உங்களுக் குத் தெரிஞ்ச ஃபிரெண்ட்ஸ் வேற யாரும் இதேமாதிரி இருக்காங்களா?

கு.த: இருக்காங்க! அவங்க எல்.ஐ.சி-ல ஒர்க் பண்றாங்க. லெக்சரரா ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. இ.பி-யில ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. சொன்னாக்கா, பண்ணித் தரலாம்.

தொ.அ: அவங்கள்லாம் எவ்வளவு?

கு.த: எல்லாம் கொஞ்சம் பெரிய ஃபேமிலி பாருங்க. நல்லா இருப் பாங்க. ஐம்பதாயிரம் வரைக்கும் வாங்கறாங்க.

தொ.அ: அவங்க வீட்டுக்குல்லாம்கூட தெரியுமா?

கு.த: அதுங்களா... .ஒரு சிலர் வீட்டுல தெரியலாம். ஆனா, அவங்க ஹஸ்பெண்டுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு சரியாத் தெரியலை!

தொ.அ: ஆனா, வருவாங்கள்ல?

கு.த: ம்...

தொ.அ: எப்படி? வேலைக்குப் போனா எப்படி வருவாங்க?.

கு.த: எத்தனை நாள் வேணுமோ லீவு எடுத்துட்டு வருவாங்க!

தொ.அ: ஓ... ஓ... வேற பிரச்னை எதுவும் இருக்காதுல்ல?

கு.த: ஒரு பிரச்னையும் இருக்காது. நீங்க என்ன பிரச்னையைக் கேட் கறீங்க?

தொ.அ: இந்த ஹெச்.ஐ.வி... எய்ட்ஸ் அந்த மாதிரின்னு சொல்றாங்களே... ஒரே பயமா இருக்கு (சிரிக்கிறார்!).

கு.த: (பதிலுக்கு மெலிதாகச் சிரித்து) நாங்க ஃபேமிலி கேர்ள்ஸ்தானேங்க! அதனால ஒண்ணும் வராது! அதுமாதிரி கேக்கறாங்கனுதான், ஒருத்தர்கிட்டே அக்ரிமென்ட் தொடங்குறதுக்கு முன்னாடி நாங் களும்கூட ஃபிரெஷ்ஷா மெடிக்கல் டெஸ்ட் எடுத்துத் தந்துடறோம்.

தொ.அ: அதான்... அடுத்த மாசத்துக்கு இது பண்ணிக்கலாம்னுதான்... அன்னிக்கு ............கிட்ட 5,000 பணம் கொடுத்திருந்தேன், கொடுத் துட்டாரா?

கு.த: கொடுத்துட்டாரு.

தொ.அ: இதே வருஷத்துல மறுபடி வருவேங்க. அப்ப உங்க ஃபிரெண்ட் யாராவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்... (சிரிக்கிறார்).

கு.த: பார்த்துக்கலாம்ங்க. இல்லாட்டி அவர்கிட்டயே(?)கூட கேட்கலாம்.

தொ.அ: இந்த லெக்சரர் வேலை பாக்குறவங்க... (சட்டென்று) அது மாதிரி இல்லாட்டியும் காலேஜ் பொண்ணுங்க யாராவது இருக் காங்களா?

கு.த: காலேஜ் பொண்ணுங்களா? எனக்குத் தெரிஞ்சு காலேஜ் லெக் சரர்தான் இருக்காங்க....

தொ.அ: (மறுபடி) இந்த மாதிரி சின்னப் பொண்ணுங்க இல்லைன்றீங்க... ஆனா, இதுல பிரச்னை எதுவும் இருக்காதுல்ல..?

கு.த: இல்லீங்க... திருச்சியில அம்பது அறுபது பேர் இருக்காங்க....

தொ.அ: அவ்வளவு பேருங்களா?! எப்படி..? இவங்க எல்லாருக்குமே பேசி முடிக்கிறதுக்கு ஆள் இருக் காங்களா?

கு.த: ம்... இருக்காங்க. இப்ப உங்களை அறிமுகப்படுத்தி வெச்சாங்கள்ல... அவங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.

தொ.அ: இவங்களுக்கு நீங்க ஏதாச்சும் பணம் தரணுமுங்களா...

கு.த: அவங்களே கமிஷன் மாதிரி எடுத்துப்பாங்க...

தொ.அ: பட்.. என்னிக்காவது இதெல்லாம் பிரச்சனைஆயிடாதா?

கு.த: அப்படி ஆகறதுக்கு சான்ஸ் இல்லை, ஏன்னா நாங்க எல்லாம் ஃபேமிலீல இருக்கோம் பாருங்க... அதனால யாருக்கும் இப்படினு தெரியாது. அதுவும் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சு பண்றதால ஒண்ணும் பிரச்னையில்லை.

தொ.அ: அவரு எப்படிங்க அக்செப்ட் பண்றாரு, ஆச்சர்யமா இருக்கு!

கு.த: இல்லை.... தெரிஞ்சுதான், நாங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணித்தான் இப்படி பண்றது.

தொ.அ: ஃபேமிலியில ஏதாச்சும் பெரிசா பணப் பிரச்னைங்களா?

கு.த: பிரச்னை இருக்கு. அவரு வாங்கற சம்பளம் எங்களுக்குப் பத்தாது. அதனால இந்த மாதிரி!

தொ.அ: அடுத்த குழந்தை எதுவும் பெத்துக்கலையா.....

கு.த: இல்லைங்க... பார்க்கலாம்.

தொ.அ: (சில நொடி அமைதி நிலவ) சரி... அதான் அடுத்த மாசத்துக்கு கன்ஃபார்ம் பண்ணிடலாம்னு...

கு.த: கண்டிப்பா வாங்க.

தொ.அ: இன்னும் 20,000 ரூபாய் தரணும், சரிங்களா?

கு.த: வரும்போது தாங்க!

தொ.அ: சரிங்க. அப்ப அடுத்த மாசத்துக்கு நீங்க வேற யாரையும் எடுத்துக்க வேணாம்.

கு.த: இல்லீங்க... பணம் வாங்கிட்டா அப்படிஎங்க குடும்பத்துல செய்ய மாட்டோம்!

தொ.அ: ஓகே, நான் கிளம் புறேன்...

கு.த: போய்ட்டு வாங்க..!

விக்கித்துப் போன நிலையிலேயே நாம் வெளியில் வருகிறோம். அடுத்தடுத்து நாம் சந்தித்த இன்னும் சில முகங்கள், அவர்களின் சுற்றுச் சூழல்கள்... தோரணைகள்...

அது ஒரு விசாரணை வெடி குண்டு!

source : http://neetheinkural.blogspot.com/2010/01/blog-post_07.html

அனுதின மன்னா ஜனவரி 09

தேவ நீதி

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். - மாற்கு 16:16.


நேற்றைய தினத்தின் இரட்சிப்பின் செய்தியைப் படித்து, நீங்கள் கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருந்தால் அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ‘என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார், தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்’ என குதூகலத்துடன் நீங்களும் பாடலாம். மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசுகிறிஸ்து கூறினார் லூக்கா 15:10). பரலோகத்தில் தூதர்களுக்கு மத்தியில் சந்தோஷம் உண்டென்றால் அது இரட்சிக்கப்பட்ட பாவியினிமித்தமே. அல்லேலூயா!


சரி இரட்சிக்கப்பட்டபின் என்ன செய்ய வேண்டும் என்றுக் கேட்டால், முழுக்கு ஞானஸ்நானமே. இதை நான் ஏன் செய்ய வேண்டும், நான் குழந்தையாய் இருக்கும்போதே என் பெற்றோர் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்து விட்டார்களே என்று நீங்கள் கூறினால், அது வேதத்தின்படி சரியான ஞானஸ்நானம் அல்ல. வேதம் முழுக்கு ஞானஸ்நானத்தையே ஆதரிக்கறது. இயேசுகிறிஸ்துவும் முழுக்கு ஞானஸ்நானமே எடுத்தார். சரி, நான் ஞானஸ்நானம் எடுக்கவில்லை என்றால் பரலோகத்திற்கு போக முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். கர்த்தர் மேல் வைக்கும் விசுவாசமே உங்களை பரலோகத்தில் சேர்க்கும். ஆனால், நீங்கள் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொண்டதை, தேவனுடைய கிருபையை பெற்றுக் கொண்டதை வெளிப்படையாக ஞானஸ்நானத்திற்கு கீழ்ப்படிவதன் மூலம் காட்டுகிறீர்கள். ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் - (கொலேசேயர். 2:12) என்று வேதம் நமக்கு கூறுகிறது. ஆகவே பாவத்துக்கு நாம் மரித்து, நீதிக்கு
பிழைக்கத்தக்கதாக ஞானஸ்நான ஆராதனைக்கு நீங்கள் கடந்து வர வேண்டும்.


இந்த ஞானஸ்நானம் ஏதோ பெந்தேகோஸ்தே சபைகளுக்கு என்று யாரும் தவறாக எண்ண
வேண்டாம். இது கிறிஸ்தவர்களாக இருக்கும் யாவருக்கும் இயேசுகிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட கட்டளையாகும். இதைக்குறித்து தர்க்கம் செய்ய வேண்டுமென்றால், எவ்வளவோ செய்யலாம்.ஆனால் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, அதன்படி செய்யும்போது நமக்கு நிச்சயமான ஆசீர்வாதம் கிடைக்கும். நாங்களும் பாரம்பரிய சபையில் பிறந்து வளர்ந்து குழந்தை ஞானஸ்நானம் எடுத்தவர்கள். ஆனால் ‘சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’ என்ற வசனத்தின்படி சத்தியத்தை அறிந்தபின்பு காலத்தை கடத்தவேயில்லை உடனே கீழ்ப்படிந்தோம். கர்த்தரை கனப்படுத்தியபோது கர்த்தர் எங்களை கனப்படுத்த தயங்கவேயில்லை. ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்; என்றார். - (மத்தேயு. 28:19,20). இயேசுகிறிஸ்துவே இதை நமக்கு கட்டளையாய் கொடுத்திருக்கிறபடியால், அவரை விசுவாசிக்கிற நாம் யாவரும் அதைச் செய்ய வேண்டும். இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் எடுக்க வந்த போது யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம்பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். யோவான் - 3:14-15. இப்படி தேவ நீதியை இயேசுகிறிஸ்துவே நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றால் நாமும் நிறைவேற்ற வேண்டியது
அவசியமாகிறது. அது, நாம் ஞானஸ்நானம் எடுப்பதை இன்னும் அதிகமாக வலியுறுத்துகிறது. வசனத்துக்கு கீழ்ப்படிவோம், கர்த்தருடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்வோம்.


இயேசுவின் பின்னே நான் செல்வேன்

திரும்பி பார்க்க மாட்டேன்

உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே

இயேசு சிந்திய இரத்தத்தினாலே என்றும் விடுதலையே



ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசிக்கிற நல்ல பிதாவே, வசனத்துக்கு கீழ்ப்படிந்து, தேவ நீதியை நிறைவேற்ற எங்களுககு கிருபை செய்யும். நாங்கள் எங்கள் பாரம்பரியத்தையே பற்றிக் கொண்டிருக்காமல், தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, உம்மை கனப்படுத்த எங்களுக்கு கிருபை பாராட்டும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail

Friday, January 8, 2010

அனுதின மன்னா ஜனவரி 08

அனுக்கிரக காலம்

அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார், இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். – அப்போஸ்தலர். 17:30.


உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் மூழ்கும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்கவில்லை. 1912-ஆம் வருடம் அந்த பயங்கரமான இரவில் அந்தக் கப்பல் ஒரு பனிமலையின் மேல் மோதி, மூழ்கியது. ஆயிரக்கணக்கானோர் அந்த இரவில் அந்த அட்லாண்டிக் கடலில் மூழ்கி மரித்தனர். இவர்களுகடைய விவரங்களை அறிவதற்கு லிவர்பூல் என்னுமிடத்தில் உள்ள காரியாலயத்தில் அவர்களுடைய உறவினர்கள் கூடியிருந்தனர்.


அங்கு இரண்டு பெரிய கரும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஓன்றில் காப்பாற்றப்பட்டவர்கள் என்றும், மற்றொன்றில் அழிந்தவர்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது. அவ்வப்போது ஒரு மனிதன் கையில் ஒரு வெள்ளைத்தாளில் ஒரு பெயரோடு வருவான். அவன் அந்தப் பேரை எந்தப் பலகையில் ஒட்டுவான் என்று மொத்த கூட்டமும் ஆவலோடு பார்த்து நிற்ப்பார்கள். எப்படியாவது தங்களுக்கு வேண்டியவர் பிழைத்திருக்க மாட்டாரா என்று நப்பாசையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


ஆம் பிரியமானவர்களே இப்போதும் உலகத்தில் இரண்டு கூட்டம் மாத்திரமே உண்டு. ஒன்று இரட்சிக்கப்பட்டவர்கள் கூட்டம் மற்றது இரட்சிக்கப்படாத கூட்டம். நீங்கள் எந்த கூட்டத்தில் இருக்கிறீர்கள்? என்னோடுகூட ஒரு சகோதரி வேலை செய்தார்கள். அவர்கள் கிறிஸ்துவின் மேல் அன்பு நிறைந்தவர்கள். இரட்சிக்கப் பட்ட ஒரு சகோதரி. நானும் அவர்களும் வேலையில் இருக்கும்போது எங்களது வேலை குறைந்த நேரங்களில் வேதத்துக்கடுத்த காரியங்களை குறித்து பகிர்ந்துக் கொள்வோம். இருவரும் வேத வசனங்களை மனப்பாடமாக சொல்லிப் பார்த்துக் கொள்வோம். எனக்கு மிகவும் இனிமையானவராக இந்த சகோதரி இருந்தார்கள். ஒரு நாள் வேலையில் இருக்கும்போது அவர்கள் பாத்ரூம் போய் வருகிறேன் என்றுச் சொல்லி போனவர்கள் வரவில்லை. போய் கூப்பிட்டுப் பார்த்தால் கதவு திறக்கப்படவில்லை. உடைத்துப் பார்த்த போது மரித்து இருந்தார்கள். அவர்களுக்கு எந்த வியாதியும் இல்லை. திடீரென்று மரித்துப போனார்கள். இந்தச் செய்தி கேட்டபோது நான் அழுதேன், புலம்பினேன். ஆனால் திரும்ப அந்த உயிர் வருமா? நான்அவர்களின் இடத்திற்கு போவேனேயல்லமல் அவர்கள் திரும்ப வர மாட்டார்கள். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், நாளை நமக்கு என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. நமது உயிர் நம் கைகளில் இல்லை. இரட்சிக்கப்பட்டிருந்தால் எந்த நேரம் நம் உயிர் போனாலும் கவலை யில்லை, ஏனென்றால் நாம் தேவனோடு கூட இருப்போம். ஆனால் இரடசிக்கப்படவில்லை என்றால் நித்ய நித்யமாய் நரக்த்தில் தள்ளப்படுவோமே!


மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? உங்கள் ஆத்துமா இரட்சிக்கப்பட்டிருக்கிறதா? சகோதரனே, சகோதரியே உங்களை நேசிப்பதால் சொல்கிறேன். இரட்சிக்கப்பட்டு விடுங்கள். எந்த நேரம் மரணம் வந்தாலும் கவலையற்றிருப்போம். இந்த உலகத்தில் இருக்கும் வரை நம் தேவன் நம்மோடிருக்கிறார். நாம் மரித்தவுடன் நாம் தேவனோடு இருப்போம் அதுதான் வித்தியாசம். இயேசுகிறிஸ்துவின் மாசில்லாத இரத்தம் நம்முடைய பாவங்களுக்காக சிந்தப்பட்டதே! அவர் சிலுவையில் பட்ட பாடுகள் எதற்காக? நம்முடைய பாவங்கள் மனனிக்கப்பட்டு நாம் நித்திய இராஜ்ஜியத்திற்கு உரியவர்களாக மாறும்படிதானே! இன்றே இரட்சண்ய நாள், இன்றே அனுக்கிரகக் காலம், கிருபையின் காலத்திலேயே நாம் இரட்சிக்கப்பட்டுவிடுவோமா? ஒரு வேளை இன்னும் ஒரு தருணம் நமக்கு கொடுக்கப்படாவிட்டால் என்ன செய்வோம்? ஆகையால் இப்போதே கீழ்க்கண்ட ஜெபத்தை ஏறெடுத்து இயேசகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வோம்.


இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பில்லை

இயேசுராஜா நாமம் சொல்லாமல் இரட்சிப்பும் இல்லை



ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த ஜெபத்தின் மூலம் உம்மிடத்தில் என்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறேன். இயேசுகிறிஸ்து உம்முடைய சொந்தக் குமாரன் என்று நான் விசுவாசித்து என்னுடைய வாயினால் அறிக்கையிடுகிறேன். என் பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்றும் நான் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவர் சிலுவையில் பாடுபட்டார் என்றும் விசுவாசிக்கிறேன். அவர் மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும் விசுவாசிக்கிறேன். என்னுடைய இருதயத்தில் இப்போதே வாரும் என்று அழைக்கிறேன். என்னுடைய சொந்த இரட்சகராக இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன். என் வாழ்நாள் எல்லாம் அவரையே தொழுதுக் கொள்வேன் என்று வாக்களிக்கிறேன். நான் இப்போது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, மறுபடியும் பிறந்திருக்கிறேன் என்று என் வாயினால் அறிக்கையிடுகிறேன். இயேசுகிறிஸ்துவின் மூலம் என் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். என் ஜெபத்தைக்
கேட்டதற்காக நன்றி ஆமென் ஆமென்.

நீங்கள் இந்த ஜெபத்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லியிருப்பீர்களானால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். உங்கள் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய வருகையில நீங்களும் காணப்படுவீர்கள். கர்த்தருக்கென்று சாட்சியாக வாழுங்கள். அவருக்கே எல்லா துதி கனம் மகியை உண்டாவதாக ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail

Thursday, January 7, 2010

அனுதின மன்னா ஜனவரி 07

ஆலயத்திற்கு செல்வோம்

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம், நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். - எபிரேயர் 10:25 .


ஒரு மனிதர் சபைக்கு ஒழுங்காக செல்பவர், ஒரு முறை ஒரு செய்தித்தாளில் எடிட்டர் பக்கத்திற்கு,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்குச் செல்வது பிரயோஜனமில்லை என்றும், தான் கடந்த 30 வருடங்களாக சபைக்குச் செல்வதாகவும், அங்கு, ஏறக்குறைய 3000 போதகங்களைக் கேட்டிருப்பதாகவும், ஆனால் இப்போது, போதகர் செய்த பிரசங்கங்களில் ஒன்றுக் கூட தன் நினைவில் இல்லையென்றும், போதகர் தன் நேரத்தையும் அவருடைய நேரத்தையும் வீணடிப்பதாகவும் எழுதியிருந்தார். மற்றவர்களும் அதில் சேர்ந்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். இது சில வாரங்களுக்குச் சென்றது. கடைசியில் ஒரு விசுவாசி எழுதினார், “எனக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிறது. என் மனைவி ஏறக்குறைய 32,000 தடவை உணவுகளை சமைத்து தந்திருக்கிறாள். அவள் என்ன சமைத்தாள் என்று கேட்டால் எனக்கு எதுவும் ஞாபகமில்லை, ஆனால் அவைகள் என் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நான் வேலை செய்வதற்கு எனக்கு சக்தியையும் கொடுத்து வருகின்றன. என் மனைவி சமைத்துக் கொடுத்திருக்கவில்லை என்றால், நான் இந்நேரம்
சரீரபிரகாரமாக மரித்திருப்பேன். அதுப் போல நான் ஆலயத்திற்குச் சென்று கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கவில்லை என்றால் ஆத்தும ரீதியாக எப்போதோ மரித்திருப்பேன். தேவன் எனக்கு கொடுத்த சரீர, ஆத்மீக உணவுகளுக்காக ஸ்தோத்திரம்” என்றார்.


சிலருக்கு ஆலயத்திற்கு செல்வதென்றால் மிகவும் கஷ்டம். ஏனென்றால் அன்று ஒருநாள்தான்
படுக்கையிலிருந்து லேட்டாக எழுந்து, ஆற அமர சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே என்ற எண்ணம். தேவனுடைய வீட்டிற்குச்சென்று அங்கு அவருடைய ஆசீர்வாதத்தை பெற்று வரும்போது நம் வாழ்க்கை செழிப்பாக மாறும். கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன் என்று தாவீது ராஜா தான் ஒரு அரசனாயிருந்தாலும் பல அலுவல்கள் இருந்தாலும் ஆலயத்திற்கு செல்லும்போது மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தார். மத்திய கிழக்கு நாடுகளில் எத்தனை நாடுகளில் சபைக்குச் செல்ல முடியாத தடை! அங்கு ஞாயிற்றுக் கிழமைதான் சபை என்றில்லை, வாரத்தில் எந்த நாளும் சபைக்குச் செல்லலாம், அப்படி தடையில்லாதபோது வேலையினிமித்தமாக போக முடியாத சூழ்நிலை! நம்மில் எத்தனைப் பேருக்கு ஞாயிற்றுக் கிழமை ஓய்வுநாள்! 84 ம் சங்கீதம் முழுவதும் வாசித்துப் பாருங்கள். ஆலயத்திற்கு செல்வதைக் குறித்து அருமையான வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கினறன. எனக்கு சில நேரங்களில் சபைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது இந்த அதிகாரத்தை வைத்து கதறி அழுதிருக்கிறேன். கர்த்தர் கிருபையாய் இரங்கி வாரந்தோறும் செல்லும் பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். அப்பாவின் வீட்டிற்கு செல்லும்போது அவர் நம்மை நன்மைகளினால் திருப்தியாக்குகிறார். அவர் செய்த நன்மைகளை எழுதப்போனால் இந்த பக்கம் முழுவதும் போதாது.ஆலயத்திற்கு செல்வதற்கு சோம்பல் படாதீர்கள்! ஆலயத்திற்கு போவோம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.


ஜெபம்:
எங்களை நேசிக்கிற எங்கள் பரம பிதாவே, சிலர் சபை கூடுதலை விட்டு விடுவதுப் போல நாங்கள் விட்டு விடாதபடிக்கு உம்மேல் நாங்கள் அதிகமாய் அன்பு கூர கிருபை செய்யும். உம் வீட்டின் நன்மையினால் திருப்தியாக கிருபை செய்யும். ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் என்று சங்கீதக் காரனோடு நாங்களும் சேர்ந்து உம்மைத் தொழுகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே எங்கள் துதிகளை ஏறெடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail

Wednesday, January 6, 2010

அகோரி சாதுக்க‌ளின் அகோர (மூட) ந‌ம்பிக்கைக‌ள்

சில‌ நாட்க‌ளுக்கு முன்பு,ஓரு இணைய‌த்த‌ள‌த்தில் அகோரி சாதுக்க‌ளை ப‌ற்றிய‌ செய்தி ப‌டித்தேன்.மேலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ சில‌ இணைய‌த்த‌ள‌ங்க‌ளின் உத‌வியை நாடினேன்.ப‌ல‌ திடிக்கிடும் த‌க‌வ‌ல்க‌ளை தெரிந்து கொண்டேன்.அதை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்புகிறேன்.



சற்றேரக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கபாலிக பிரிவிலிறிந்து தோன்றிய ஒரு பிரிவுதான் அகோரிகள் எனப்படும் நர மாமிசம் உண்ணும் அமானுஷ்ய இந்து சாதுக்கள் பிரிவாம். தீமைகளை அழிக்கும் கடவுளான சிவனையே தங்கள் முதலும் கடைசியுமான தெய்வமாக அகோரிகள் வழி படுகிறார்கள்.

இறந்து போன மனித உடலை கங்கை கரை ஓரத்தில் எரிப்பதும், கங்கை நீரில் வீசுவதும் இறந்து போன மனிதனை சொர்கத்திற்கு கொண்டு செல்லும் என்பது வழி வழியாக இந்து சமயத்தில் பின்பற்றப்படும் ஒரு நம்பிக்கை அகோரிகள் இப்படி வீச படும் உடலை கங்கையிளிரிந்து வெளியே இழுத்து அவற்றை உண்கிறார்கள்...எரிந்தும் எரியாத பிணங்களை உண்கிறார்கள் .

இந்த அகோரி சாமியார்கள் கஞ்சா அடிப்பது , சாராயம் குடிப்பது என்று எல்லா தீயபழக்க வழக்கங்களை சிவனின் பெயரை சொல்லி செய்கிறார்கள் . இவர்கள் இப்படி ஆடை களைந்து எதன் மீதும் பிடிப்பு அற்று திரிவதால் இவர்களை முற்றும் துறந்தவர்கள் என ஒரு சாரார் நம்பி வணகுவதை காண்கிறோம் .

இந்த அகோரிகள் சுத்தம் அசுத்தம் என எதனையும் பிரித்து பார்ப்பதில்லை நான் இந்த விஷயத்தை பற்றி துலாவிய பொது சில அடித்தட்டு மக்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மாதவிடாய் காலங்களில் இந்த அகோரி சாதுக்களிடம் உடல்உறவு கொள்கிறார்களாம் .. இப்படி உறவு கொள்வதனால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் .. என்ன ஒரு மோசமான நம்பிக்கை !!

சில வீடீயோக்கள் உங்க்கள் பார்வைக்கு (பெண்க‌ள் த‌விர்க்க‌வும்)








த‌ன் இன‌த்தையே எந்த மிருக‌ங்க‌ளும் உண்ப‌தில்லை.ஆனால் ஆற‌றிவு ப‌டைத்‌த‌ ம‌னித‌ன் த‌ன் இன‌த்தையே கடவுள் பெயரை சொல்லி உண்கிறான்.என்ன‌ கொடுமை ச‌ர‌வ‌ண‌ண்...

அனுதின மன்னா ஜனவரி 06

யாரை பற்றி கொண்டிருக்கிறாய் ?

உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் - ஏசாயா 26:3


ஒரு வாலிபன் தன் தேசத்தில் இருந்த உயரமான மலையின் மேல் ஏற ஆர்வம் கொண்டான். அதற்காக பல மாதங்கள் பயிற்சி செய்து, தனக்கு மட்டுமே புகழ் வர வேண்டும் என்பதற்காக தனியாக மேலே ஏறுவதற்கு புறப்பட்டான். மலையின் மேலே ஏற ஆரம்பித்தான். உற்சாகமாக ஆரம்பித்ததால் நேரம்போவது தெரியாமல் மேலே ஏறிக் கொண்டே இருந்தான். அதற்குள் இருட்ட ஆரம்பித்தது. அவன் எங்கும் போய் தங்குவதற்கு ஆயத்தம் செய்யாததால், எப்படியும் மேலே போய் விடுவோம் என்று எண்ணத்தோடு இன்னும் அதிகமான வேகத்துடன் மேலே போக ஆரம்பித்தான். ஆதற்குள் நன்கு இருட்டி விட்டது. கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.


சிகரத்தை எட்டுவதற்கு 100 மீட்டர் இருக்கும்போது, கால் இடறி கீழே விழ ஆரம்பித்தான். எங்கும் காரிருள். எங்கு போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியாத நிலை. புவி ஈர்ப்பின் காரணமாக மிக வேகமாக கீழே போய்க் கொண்டிருந்தான். கீழே போகும்போது தான் எப்படியும் மரிக்க போகிறோம் என்று தெரிந்து விட்டது. அப்படி அவன் நினைத்துக் கொணடிருக்கும்போது ஒரு இழுப்பு. மலையின் உச்சியிலிருந்து அவன் இடுப்பில் கட்டியிருந்த கயிறு முடிந்து அவனை அந்தரத்தில் தொங்க வைத்தது. இப்போது அவனுக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு இருந்த ஒரே வழி கர்த்தர் மாத்திமே. வேறு வழி இல்லாமல், தன்னால் இயன்ற வரை சத்தமாக 'கர்த்தாவே எனக்கு உதவி செய்யும்' என்று கதறினான். உடனே வானத்திலிருந்து ஒரு சத்தம், 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டது. 'என்னைக காப்பாற்றும்' என்றான். 'நான் உன்னை காப்பாற்றுவேன் என்று நீ நினைக்கிறாயா?' என்று ஆண்டவர் கேட்டார். 'ஆம் ஆண்டவரே நான் நம்புகிறேன' என்று சொன்னான். அப்போது கர்த்தர், 'அப்படியானால் உன் இடுப்பிலிருக்கும் கயிற்றை அறுத்து விடு' என்றார். அந்த நேரத்தில் அமைதி நிலவியது. அவன் அந்த கயிற்றை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அடுத்த நாள் காலையில் அவனை பார்த்து காப்பாற்ற வந்தவர்கள் அவன் கயிற்றை கெட்டியாக பிடித்தபடியே குளிரில் உறைந்துப் போய் மரித்திருக்கக் கண்டார்கள். அவன் தரையிலிருந்து இரண்டு அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கண்டார்கள்.


இன்று நம்மில் எத்தனைப் பேர் அவன் கயிற்றை பிடித்துக் கொணடிருந்ததைப் போல இந்த மாய உலகத்தைப பிடித்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தர் 'இந்த உலகத்தை விட்டுவிட்டு என்னை சார்ந்துக் கொள்' என்று அழைக்கிறார். ஆனால் நாம் அதை விடாதபடி கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் - 1 யோவான் 2:17. ஆம், இந்த உலகம் ஒருநாள் அழிந்துக் போகும். இதைப் பற்றிக் கொள்கிறவர்களும் நித்திய நித்ய காலமாய் எரிகிற அக்கினிநரகத்தில் எரிக்கப்படுவார்கள். உலகமாகிய கயிற்றை நம்மிடத்திலிருந்து அறுத்துவிட்டு தேவனை சார்ந்துக் கொள்வோம். நாம் தேவனை உறுதியாய் பற்றிக் கொணடோமானால், நம்மை பூரண சமாதானத்துடன் கர்த்தர் காத்துக் கொள்வார். உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் - ஏசாயா 26:3 .


பாவத்தின் பலன் நரகம் நரகம்

ஓ பாவி நடுங்கிடாயோ

கண் காண்பதெல்லாம் அழியும் அழியும்

காணாததல்லோ நிச்சயம்



ஜெபம்:
எங்களை நேசிக்கிற எங்கள் பரம தகப்பனே, நாங்கள் உம்மையே எந்த நேரத்திலும் பற்றிக்
கொண்டிருக்கவும், உம்மையே நம்பிக் கொண்டிருக்கவும் உதவி செய்யும். உலகத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் வெறுக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail