Saturday, January 2, 2010

அனுதின மன்னா ஜனவரி 02

மூன்று காரியங்கள்

பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. - 1யோவான் 5:7,8.




நமது வாழ்க்கையில் ஒரு முறை போனால் திரும்ப பெற முடியாத மூன்று காரியங்கள்
1. காலம்
2. வார்த்தைகள்
3. சந்தர்ப்பங்கள்

ஒரு மனிதனை அழிக்கும் மூன்று காரியங்கள்
1. கோபம்
2. பெருமை
3. மன்னியாதிருத்தல்

இழக்க கூடாத மூன்று காரியங்கள்
1. நம்பிக்கை
2. சமாதானம்
3. நேர்மை

மிகவும் அருமையான மூன்று காரியங்கள்
1. அன்பு (கர்ஸ்ங்)
2. குடும்பமும் நண்பர்களும் (எஹம்ண்ப்ஹ் & எழ்ண்ங்ய்க்ள்)
3. தயவு (ஃண்ய்க்ய்ங்ள்ள்)

நமது வாழ்க்கையில் நிலைத்திராத மூன்று
1. அதிர்ஷ்டம்
2. வெற்றி
3. கனவுகள்

ஒரு மனிதனை உருவாக்கும் மூன்று காரியங்கள்
1. கடமை
2. உண்மை
3. கடின உழைப்பு

நம் வாழ்க்கையில் என்றும் நிலைத்திருப்பவர்
1. பிதா
2. குமாரன்
3. பரிசுத்த ஆவி



இவைகளில் எதை விட வேண்டுமோ அதை விட்டு எதைப் பெற வேண்டுமோ அதைப் பெற்று, உங்கள் ஆத்துமா வாழ்கிறதுப் போல நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க ஆசிக்கிறேன். தேவன் தாமே அதற்கு உதவி செய்வாராக

ஜெபம்:
எங்கள் அன்பின் பரம தகப்பனே, எங்களோடு என்றும் நிலைத்திருப்பவரே, உம்மை துதிக்கிறோம்.எங்களை அழிக்கும் மூன்று காரியங்களைவிட்டு, உருவாக்கும் காரியங்களில் எங்களை ஈடுபடுத்தி, உமது நாம மகிமைக்காக வாழ எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

No comments:

Post a Comment