Friday, January 8, 2010

அனுதின மன்னா ஜனவரி 08

அனுக்கிரக காலம்

அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார், இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். – அப்போஸ்தலர். 17:30.


உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் மூழ்கும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்கவில்லை. 1912-ஆம் வருடம் அந்த பயங்கரமான இரவில் அந்தக் கப்பல் ஒரு பனிமலையின் மேல் மோதி, மூழ்கியது. ஆயிரக்கணக்கானோர் அந்த இரவில் அந்த அட்லாண்டிக் கடலில் மூழ்கி மரித்தனர். இவர்களுகடைய விவரங்களை அறிவதற்கு லிவர்பூல் என்னுமிடத்தில் உள்ள காரியாலயத்தில் அவர்களுடைய உறவினர்கள் கூடியிருந்தனர்.


அங்கு இரண்டு பெரிய கரும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஓன்றில் காப்பாற்றப்பட்டவர்கள் என்றும், மற்றொன்றில் அழிந்தவர்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது. அவ்வப்போது ஒரு மனிதன் கையில் ஒரு வெள்ளைத்தாளில் ஒரு பெயரோடு வருவான். அவன் அந்தப் பேரை எந்தப் பலகையில் ஒட்டுவான் என்று மொத்த கூட்டமும் ஆவலோடு பார்த்து நிற்ப்பார்கள். எப்படியாவது தங்களுக்கு வேண்டியவர் பிழைத்திருக்க மாட்டாரா என்று நப்பாசையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


ஆம் பிரியமானவர்களே இப்போதும் உலகத்தில் இரண்டு கூட்டம் மாத்திரமே உண்டு. ஒன்று இரட்சிக்கப்பட்டவர்கள் கூட்டம் மற்றது இரட்சிக்கப்படாத கூட்டம். நீங்கள் எந்த கூட்டத்தில் இருக்கிறீர்கள்? என்னோடுகூட ஒரு சகோதரி வேலை செய்தார்கள். அவர்கள் கிறிஸ்துவின் மேல் அன்பு நிறைந்தவர்கள். இரட்சிக்கப் பட்ட ஒரு சகோதரி. நானும் அவர்களும் வேலையில் இருக்கும்போது எங்களது வேலை குறைந்த நேரங்களில் வேதத்துக்கடுத்த காரியங்களை குறித்து பகிர்ந்துக் கொள்வோம். இருவரும் வேத வசனங்களை மனப்பாடமாக சொல்லிப் பார்த்துக் கொள்வோம். எனக்கு மிகவும் இனிமையானவராக இந்த சகோதரி இருந்தார்கள். ஒரு நாள் வேலையில் இருக்கும்போது அவர்கள் பாத்ரூம் போய் வருகிறேன் என்றுச் சொல்லி போனவர்கள் வரவில்லை. போய் கூப்பிட்டுப் பார்த்தால் கதவு திறக்கப்படவில்லை. உடைத்துப் பார்த்த போது மரித்து இருந்தார்கள். அவர்களுக்கு எந்த வியாதியும் இல்லை. திடீரென்று மரித்துப போனார்கள். இந்தச் செய்தி கேட்டபோது நான் அழுதேன், புலம்பினேன். ஆனால் திரும்ப அந்த உயிர் வருமா? நான்அவர்களின் இடத்திற்கு போவேனேயல்லமல் அவர்கள் திரும்ப வர மாட்டார்கள். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், நாளை நமக்கு என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. நமது உயிர் நம் கைகளில் இல்லை. இரட்சிக்கப்பட்டிருந்தால் எந்த நேரம் நம் உயிர் போனாலும் கவலை யில்லை, ஏனென்றால் நாம் தேவனோடு கூட இருப்போம். ஆனால் இரடசிக்கப்படவில்லை என்றால் நித்ய நித்யமாய் நரக்த்தில் தள்ளப்படுவோமே!


மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? உங்கள் ஆத்துமா இரட்சிக்கப்பட்டிருக்கிறதா? சகோதரனே, சகோதரியே உங்களை நேசிப்பதால் சொல்கிறேன். இரட்சிக்கப்பட்டு விடுங்கள். எந்த நேரம் மரணம் வந்தாலும் கவலையற்றிருப்போம். இந்த உலகத்தில் இருக்கும் வரை நம் தேவன் நம்மோடிருக்கிறார். நாம் மரித்தவுடன் நாம் தேவனோடு இருப்போம் அதுதான் வித்தியாசம். இயேசுகிறிஸ்துவின் மாசில்லாத இரத்தம் நம்முடைய பாவங்களுக்காக சிந்தப்பட்டதே! அவர் சிலுவையில் பட்ட பாடுகள் எதற்காக? நம்முடைய பாவங்கள் மனனிக்கப்பட்டு நாம் நித்திய இராஜ்ஜியத்திற்கு உரியவர்களாக மாறும்படிதானே! இன்றே இரட்சண்ய நாள், இன்றே அனுக்கிரகக் காலம், கிருபையின் காலத்திலேயே நாம் இரட்சிக்கப்பட்டுவிடுவோமா? ஒரு வேளை இன்னும் ஒரு தருணம் நமக்கு கொடுக்கப்படாவிட்டால் என்ன செய்வோம்? ஆகையால் இப்போதே கீழ்க்கண்ட ஜெபத்தை ஏறெடுத்து இயேசகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வோம்.


இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பில்லை

இயேசுராஜா நாமம் சொல்லாமல் இரட்சிப்பும் இல்லை



ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த ஜெபத்தின் மூலம் உம்மிடத்தில் என்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறேன். இயேசுகிறிஸ்து உம்முடைய சொந்தக் குமாரன் என்று நான் விசுவாசித்து என்னுடைய வாயினால் அறிக்கையிடுகிறேன். என் பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்றும் நான் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவர் சிலுவையில் பாடுபட்டார் என்றும் விசுவாசிக்கிறேன். அவர் மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும் விசுவாசிக்கிறேன். என்னுடைய இருதயத்தில் இப்போதே வாரும் என்று அழைக்கிறேன். என்னுடைய சொந்த இரட்சகராக இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன். என் வாழ்நாள் எல்லாம் அவரையே தொழுதுக் கொள்வேன் என்று வாக்களிக்கிறேன். நான் இப்போது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, மறுபடியும் பிறந்திருக்கிறேன் என்று என் வாயினால் அறிக்கையிடுகிறேன். இயேசுகிறிஸ்துவின் மூலம் என் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். என் ஜெபத்தைக்
கேட்டதற்காக நன்றி ஆமென் ஆமென்.

நீங்கள் இந்த ஜெபத்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லியிருப்பீர்களானால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். உங்கள் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய வருகையில நீங்களும் காணப்படுவீர்கள். கர்த்தருக்கென்று சாட்சியாக வாழுங்கள். அவருக்கே எல்லா துதி கனம் மகியை உண்டாவதாக ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail

No comments:

Post a Comment